பத்திரிக்கை அடிக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு திருமண மண்டபத்திற்கு திருமணம் செய்துகொள்ள பெண் குடும்பத்தினருடன் வந்த போது அவர்கள் திருமணத்திற்கு பதில் வேறொரு திருமணம் அங்கே நடந்தால் எப்படி இருக்கும்?
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஷ்(25) விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கலியன் என்பவரது மகளை திருமணம் செய்து கொள்வதாக தெரிந்தவர்கள் மூலம் அணுகியுள்ளார்கள், விக்னேஷ் 10வது பெயிலானவர், மணப்பெண் நர்சாக பணிபுரிபவர், வியாசர் பாடியில் ஏதோ ஒருவரின் வீட்டை தன் வீடு என்று காண்பித்த விக்னேஷ் குடும்பத்தினர் மண்டபம் ஏற்பாடு செய்ததாக கூறினர், பத்திரிக்கை எல்லாம் அடிக்கப்பட்ட நிலையில் திருமணத்திற்காக மண்டபம் சென்ற பெண் வீட்டாருக்கு அதிர்ச்சி, அங்கே வேறொரு திருமணம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
மாப்பிள்ளை விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டால் மொபைல் போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது, காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து விக்னேஷ் மற்றும் அவரது தாய் காவேரி கைது செய்யப்பட்டனர், அவரது தந்தையை காவல்துறை தேடிவருகிறது.
விசாரணையில் பெண்வீட்டார் வரதட்சணையாக தருவதாக கூறியிருந்த 6 பவுன் நகைகளை திருமணத்திற்கு முன்பே வாங்கிக்கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் தெரியாமல் ஓடிவிட குடும்பமே திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.