BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 13 September 2014

சென்னையில் வெட்டப்படும் மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய பசுமை தாயகத்தினர் [படங்களுடன்]



நேற்று தி.நகரில் சாலை விரிவு படுத்துவதற்காக என்று கூறி சாலையோரத்தில் இருந்த பெரிய பெரிய மரங்களை மாநகராட்சியினர் வெட்டினர், தகவல் அறிந்த பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் இர.அருள் உட்பட பலர் வந்து மரங்களை சுற்றி நின்று தடுத்தனர், அப்போது வேலை நிறுத்தப்பட்டாலும் பின்னர் மரங்களை வெட்டித்தள்ளினார்கள்.

சென்னை நகரில் வெட்டப்பட்ட மற்றும் வெட்டப்பட உள்ள சாலையோர மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பசுமைத் தாயகம் சார்பில் 13.09.2014 சனிக்கிழமை,காலை, சென்னை - தி.நகர், அபிபுல்லா சாலை, கோடம்பாக்கம் ரெயில் நிலையம் எதிரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் மாநிலச் செயலாளர் இர. அருள், துணைச் செயலாளர் ச.க. சங்கர், இரா. செ. வெங்கடேசன், சாணக்கிய பாபு, சந்தானம், வழக்கறிஞர் ரவி, சாஜா குணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது குறித்த பசுமை தாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டதாவது.

• சென்னை அபிபுல்லா சாலையில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வளர்க்கப்பட்டிருந்த நாவல் மரத்தை 28.08.2014 அன்று சென்னை மாநகராட்சி அலுவலர்கள் சட்டவிரோதமாக வெட்டியுள்ளனர்.

• அதற்கு அருகில் பசுமைத் தாயகம் சார்பில் வளர்க்கப்பட்டிருக்கும் ஏழிலைப்பாலை மரத்தையும் வெட்டும் முயற்சி 12.09.2014 அன்று தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.

• ஒரு மரத்தை வெட்டினால் 10 மரம் நட்டு அதனை ஐந்தாண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும் என்கிற உயர்நீதி மன்ற உத்தரவை சென்னை மாநகராட்சி மதிக்கவில்லை.

• சென்னை மாநகரில் ஆண்டுக்கு 1500 மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு மரத்துக்கு பதில் 10 மரம் வளர்க்க வேண்டும் என்கிற உத்தரவை பின்பற்றினால் - ஆண்டுக்கு 15000 மரங்கள் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

• சென்னை மாநகரின் மரங்களைக் காக்கவும், பசுமைச் சூழலை ஏற்படுத்தவும் 'மரங்கள் ஆணையம்' (Tree Authority) என்கிற அதிகார அமைப்பை, போதுமான அதிகாரம், பணம், ஆட்கள் சக்தியுடன் சென்னை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும். மரம் வெட்டும் தேவை ஏற்பட்டால் அதனை ஆராய்ந்து இந்த ஆணையத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும்.

• தமிழ் நாட்டில் மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என 2007 ஆம் ஆண்டிலேயே சென்னை உயர்நீதி மனறம் தெரிவித்தது. எட்டு வாரங்களில் அமைக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் கூறியும், எட்டு ஆண்டுகளாகிக் கூட இன்னமும் இந்த ஆணையத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தவில்லை.

• கர்நாடகம், ஆந்திரா, மராட்டியம், தில்லி ஆகிய மாநிலங்களில் மர ஆணையங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசும் மரங்கள் ஆணையத்தை (Tree Authority) உடனடியாக அமைக்க வேண்டும். குறிப்பாக சென்னை மாநகரில் மரங்கள் ஆணையம் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கான சிறப்பு சட்டத்தை (Urban Areas Preservation of Trees Act) உடனடியாக இயற்ற வேண்டும்.

Save chennai Trees இன் ஃபேஸ்புக் பக்கம்
https://www.facebook.com/SAVEChennaiTREES


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media