சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டி கிராமத்தில் ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டக்கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதைத்தொடர்ந்து கிணற்றை எட்டிப்பார்த்த போது அதில் ஒரு ஆணும், பெண்ணும் பிணமாக மிதந்தனர். இதையடுத்து போலிசுக்கு தகவல் தெரிவித்தார், போலிஸ் விசாரணையில் இறந்து போன இவர்கள் கள்ளக்காதல் ஜோடி என்று தெரிய வந்தது.
சேலத்தை சேர்ந்த மாது(வயது35) என்பவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா(25) என்ற பெண்னை திருமணம் செய்தார். இவர்களுக்கு திருமூர்த்தி(7). அம்பிகா(5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் ஜெயாவிற்கும், கடந்த 5 மாதத்திற்கு முன்பு சேலம் டவுன் பகுதியில் இருந்து இவர்கள் வசித்த அய்யந்திருமாளிகைக்கு குடியேறிய கட்டிட தொழிலாளியான வினோத்(23) என்ற திருமணம் ஆகாத இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.
இவர்கள் கள்ளக்காதல் விவகாரம் உறவினர்களுக்கு தெரியவந்த போது அவர்கள் இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து கணவன் வீட்டில் இருக்கும் போது, அவரது மனைவி ஜெயா கள்ளக்காதலன் வினோத்திடம் செல்போனில் சிரித்து பேசியதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த கணவன் ஜெயாவை கண்டித்துள்ளார், இதனால் கணவனிடம் கோபித்துக்கொண்டு ஜெயா வினோத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். இரண்டு தரப்பினரும் இருவரையும் தேடினார்கள், ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை, வினோத்தும், ஜெயாவும் பல இடங்களில் சுற்றித்திரிந்து விட்டு, இரவு கன்னங்குறிச்சியிலிருந்து கோரிமேடு செல்லும் வழியில் உள்ள ஜெயச்சந்திரனின் விவசாயக்கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
வினோத்தும் ஜெயாவும் தற்கொலை செய்துக்கொண்ட கிணற்றின் அருகில் உள்ள மோட்டார் அறை பக்கத்தில் செருப்புகள் கிடந்தன. அவற்றின் அடியில் ஒரு கடிதம் எழுதி மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதில் "எங்கள் உறவு புனிதமானது. எங்களை எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாது. நாங்கள் 5 மாதம் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை எங்களுக்கு முழுதிருப்தி அளிப்பதினால் நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம். இதனால் நாங்கள் ஒன்றாகவே சாகிறோம். எங்கள் உடல்களை ஒன்றாகவே அடக்கம் செய்யுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.