BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 30 June 2013

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பில் முதன்முறையாக ஒரு தமிழர்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீதியரசர் சதாசிவம் அவர்கள் இன்று குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜியால்  நியமிக்கப்பட்டார், சுதந்திரத்துக்கு பிறகான 65 ஆண்டுகளில் முதன் முறையாக ஒரு தமிழர் இந்த பதவியை ஏற்றுள்ளார்.
அதிகாரத்துக்கு அஞ்சாயம் நேர்மையுடனும் பொறுப்புடனும் தீர்ப்புகள் வழங்கியவர் என்பதற்கு ஒரு உதாரணம் ஒரு தலித் பஞ்சாயத்து தலைவராவது என்று சாதிவெறியுடன் மேலவளைவு முருகேசன் அவர்களும் பிறரும் கொல்லப்பட்ட வழக்கில் 17 கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்ததோடு, குற்றம் சாட்டப்பட்டிருந்த மொத்தம் 41 பேர்களில் எஞ்சிய 24 பேர்களுக்கும் குற்றச் செயலில் பங்கிருந்ததற்கு உரிய சாட்சியங்கள் இருந்தும் அவர்களுக்குத் தண்டனை வழங்க இயலாமற் போனதற்கு தமிழக அரசு முறைப்படி மேல் முறையீடு செய்யாததே காரணம் என்பதையும் தீர்ப்பில் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

# பெருமை கொள்வோம் ஒரு நேர்மையான தமிழர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்று, ஒரு லைக் போட்டு அவரை வாழ்த்துவோம்

Judge P.Sathasivam was appointed as Supreme court chief justice by the President of India, Pranab Mukherjee. Judge P.Sathasivam is the first tamil reached the Supreme court chief justice post.

லியாண்டர் பயஸ் மீதான செக் மோசடி வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸுக்கு எதிரான, செக் மோசடி வழக்கை, மும்பை உயர் நீதிம்னறம் நேற்று தள்ளுபடி செய்தது. மும்பை டிசைனர் முஸ்தபா இஷா என்பவர் பயஸின் வீட்டிற்கு டிசைன் பணி செய்ததற்கு கொடுக்கப்பட்ட 10 இலட்சம் மற்றும் 5 இலட்சம் செக் வங்கியில் பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகிவிட்டதால் பயஸிடம்
முறையிட்டும் எந்த பலனும் ஏற்படாததால் வழக்கு தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

மனு விசாரணைக்கு வந்த நாளில், முஸ்தஃபா வக்கீல் விசாரணைக்கு ஆஜராகததால், மாஜிஸ்திரேட் வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து முஸ்தஃபா, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. ஆனால், மனுதாரரோ அவரது வக்கீலோ விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.

# வழக்கு போட்டுவிட்டு ஆஜர் ஆகாமல் அப்படி என்ன வேலையாம் அவருக்கு?

Mumbai High Court dismisses cheque bounce case against Leander Paes as the  petitioner parties had not shown readiness to proceed further.

எங்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டோம் - உத்ரகாண்ட் அரசு

எங்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டோம் என உத்ரகாண்ட் வெள்ளச்சேதம் குறித்து மாநில அரசு அறிக்கை.


வெள்ள அபாயம் மற்றும் பேரழிவு குறித்த எச்சரிக்கை மாநில அரசுக்கு வெள்ளம் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் கிடைத்தது என்றும் மாநில அரசால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்துவிட்டோம் என்றும் இன்று கூடிய உத்ரகாண்ட் மாநில் அரசின் உயர்மட்ட குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு தரப்பில் சார் தாம் யாத்ரா(பத்ரிநாத், துவாரகா, பூரி மற்றும் இராமேஸ்வரம் செல்லும் ஆன்மீக பயணம்) நான்கு நாட்களுக்கு தள்ளி வைக்கும் படி அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

# வெள்ள அழிவை விட வெள்ளம் அழிவை பயன்படுத்தி பயணிகளிடம் கொள்ளையடித்ததையும் கற்பழித்ததையும் தான் பொறுக்கவே முடியலை


The Uttarakhand government has said that it did everything it could after the weather department had issued a warning on heavy rains in the state.

லவ் லேண்ட் என்னும் செக்ஸ் தீம் பார்க்குகள் தென்கொரியா மற்றும் சீனாவில்

லவ் லேண்ட் என்னும் செக்ஸ் தீம் பார்க்குகள் தென்கொரியா மற்றும் சீனாவில்

இந்தியாவில் உள்ள காஜூரகோ கோவில் முழுக்க பாலியல் கலவி காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருக்கும், அதே போன்று லவ் லேண்ட் என்னும் செக்ஸ் தீம் பார்க்குகள் தென்கொரியாவில்2004ம் ஆண்டில் ஜீஜூ தீவில் ஆரம்பிக்கப்பட்டது, இங்கு பெரிய சிற்பங்கள் பாலியல் உறவுகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகளுடன் அமைக்கப்பட்டிருந்தன, இவற்றை காணவருகின்ற காதலர்களுக்குள் இயற்கையாக இனம்புரியாத ஈர்ப்பொன்று தோன்றுவதாக கூறப்படுகிறது.

இதே போன்றதொரு லவ் லேண்ட் என்னும் தீம் பார்க் சீனாவில் சாங்கிங் என்ற இடத்தில் கட்டப்பட்டது, இது சீன சமுதாயத்தை பற்றிய தவறான எண்ணத்தை அளிக்கும் என்று கூறி சீன அரசு அதை தடைசெய்து மூடிவிட்டது, மேலும் இதை அழிக்க உத்தரவிட்டது.

# ஓவர்டோஸ் கொடுக்காமல் கோவில்களில் கோபுரங்களிலே பாலுறவு சிலைகளை வைத்து அளவாக கொண்டாடிய இனம் தமிழர் இனம்.

இந்த ஒரு படம் தவிர வேறு படங்கள் எதுவும் இணைக்க முடியாது, love land south korea மற்றும் love land china என்று கூகிள் இமேஜ்ஜில் தட்டி பார்க்கலாம்

20-20, டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் என அனைத்திலும் இந்தியா நடத்தப்போகும் உலகக்கோப்பை கிரிக்கெட்கள்

20-20, டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் என அனைத்திலும் இந்தியா நடத்தப்போகும் உலகக்கோப்பை கிரிக்கெட்கள்

2016ம் ஆண்டு 20-20 உலகக்கோப்பையையும், 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியையும் 2023ம் ஆண்டில் 50 ஓவர் உலகக்கோப்பையையும் இந்தியா நடத்தும் என்று ஐசிசி நேற்று அறிவித்துள்ளது. லண்டனில் ஐசிசியின் ஆண்டு இறுதி கூட்டத்திற்கு பின் இவைகள் அறிவிக்கப்பட்டன‌

# எவ்வளவு மேட்ச் பிக்சிங் செய்தாலும் விடாம கிரிக்கெட் பார்ப்பது இந்தியாவில் தானே

ICC announced in London after their annual meeting that India is going to conduct world cup cricket for Twenty 20 on 2016, world test championship on 2021 and 50 overs one day cricket on 2023.

தங்கம் விலை மேலும் குறையுமா?

தங்கத்தின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே வாரத்தில் 10% குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலின்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,997 டாலர் என்கிற அளவுக்கு விலை குறைந்தது. இதனால், 22 காரட் தங்கத்தின் விலையும் ஒரு கிராமுக்கு 2,400 ரூபாய்க்கும் கீழே சென்றது.

டாலர் மதிப்பு அதிகரித்ததும் நியூயார்க்கின் மிகப் பெரிய கோல்டு இ.டி.எஃப். நிறுவனமான எஸ்.பி.டி.ஆர். கோல்டு இ.டி.எஃப். ஃபண்ட் இந்த ஆண்டில் இதுவரை 381 டன் அளவுக்கு தங்கத்தை விற்பனை செய்துள்ளது. மேலும், தங்கத்தை அதிகமாக வாங்கும் சீனா மற்றும் இந்தியாவில் தேவை சமீபகாலமாக குறைந்து வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைகள் மீது கடன் தருவதைக் குறைத்ததும், தங்கத்தின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்தம் சீனாவில் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாலும் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் தங்கம் விலை இறங்கியபோது போட்டி போட்டு வாங்கிய இந்தியர்கள் தற்போது மேலும் தங்கம் விலை குறையும் என காத்திருக்கின்றார்கள்.

நீங்கள் தங்கம் விலை மேலும் குறைய காத்திருக்கிறீர்களா? அல்லது குறைந்த வரை லாபம், மேலும் அதிகரிக்கும் முன் வாங்கிவிடலாம் என்று தங்கம் வாங்குறீரா? கமெண்ட்டில் தெரிவியுங்கள்

Even gold rate decreased more than 10% in resent days, people are not showing interest to buy gold as many expect the gold rate will further go down.

தொலைகாட்சி விவாதங்களை தடை செய்யும் முஸ்லீம் அமைப்புகள் - கவலை தெரிவிக்கும் ஆளூர் ஷாநவாஸ்

முஸ்லீம் சமூகம் தொடர்பான எந்த விவாதத்தையும் தடை செய்யும் முஸ்லீம் சமூகத்தினரை குறித்து கவலை தெரிவிக்கும் ஆளூர் ஷானவாஸ்.

தாலி தேவையா? இல்லையா? என்று ஒரு தொலைக்காட்சி விவாதம் நடத்த முடியும் ஆனால் பர்தா தேவையா இல்லையா என்று விவாதம் நடத்தினால் அந்த விவாதத்தை பார்க்காமல் கூட வெறும் முன்னோட்ட காட்சிகளை வைத்து நிகழ்ச்சியை தடை செய்வார்கள், இதனால் பர்தா ஏன் போட வேண்டும் என்று அவர்களுக்கு இருக்கும் கருத்தை கூட பொதுவெளியில் வைக்கும் வாய்ப்பை தவற விடுகிறார்கள், அது மட்டுமின்றி முஸ்லீம் அமைப்புகளின் இம்மாதிரி நடவடிக்கைகள் முஸ்லீம் அமைப்புகளை ஒரு கடும் போக்கு சமூதாயமாக காட்டுகிறது. இது குறித்து ஆளூர் ஷானவாஸ் எழுதிய கருத்துகள் கீழே.

இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது என்றே தெரியவில்லை.

சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு புதிய தலைமுறை டிவியின் 'ரெளத்ரம் பழகு' நிகழ்ச்சியில், தலாக் சர்ச்சை பற்றியும் பதர் சயீதின் முறையீடு பற்றியும் ஒரு முழுமையான அலசல் ஒளிபரப்பாக இருந்தது. அதற்கான முன்னோட்டம் கூட நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்டபடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை.

தலாக் குறித்து பொது வெளியில் எதிர்மறையான கருத்துக்கள் தீவிரமாக பரப்பப்பட்டு வரும் இவ்வேளையில், பதர் சயீதின் கலகக்குரல் அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இந்நிலையில் ஊடகங்கள் இப்பிரச்சனையை கூர்ந்து கவனிக்கத் தொடங்கியுள்ளன. அண்மையில் ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் கூட இதுகுறித்த கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அதன் தொடர்ச்சியாகவே புதிய தலைமுறை டிவியிலும் இப்பிரச்சனை எடுத்துக் கொள்ளப்பட்டது.

முஸ்லிம் சமூகம் குறித்த சென்சிட்டிவான ஒரு பிரச்சனையை அலசுவதால் ஏற்படும் விளைவுகளை கவனத்தில் கொண்டே புதிய தலைமுறை டீம், மிகுந்த பொறுப்புணர்வை கையாண்டது. இது தொடர்பாக என்னை அவர்கள் தொடர்பு கொண்டபோது போதிய வழிகாட்டுதல்களை வழங்கினேன். முக்கியமாக யார் யாரிடம் பேட்டி எடுத்தால் சிறப்பாக அமையும் என்ற பட்டியலையும் கொடுத்தேன். அத்தோடு என்னுடைய கருத்துக்களையும் பதிவு செய்தேன்.

தலித் மக்களின் பாதுகாப்புக்காக அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் 'வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்' எனும் உரிமையை, தவறாகப் பயன்படுத்தப் படுகிறது எனும் காரணத்தைக் காட்டி ஆதிக்கச் சாதியினர் ஒழிக்க நினைப்பது போல், முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் தனித்த உரிமையான சரீயத் சட்டத்தை, தவறாகப் பயன்படுத்தப் படுகிறது எனும் காரணத்தைக் காட்டி பதர் சயீத் ஒழிக்க நினைக்கிறார் என்று சொன்னேன். என்னைப்போலவே பலரும் தலாக் சட்டத்தின் அவசியம் பற்றியும், அதன் நோக்கங்கள் பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளனர்.

இந்நிலையில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமல் தடைபட்டுள்ளது. தடைபட்டது என்று சொல்வதை விட தடுக்கப்பட்டது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். நிகழ்ச்சி ஏன் வரவில்லை என்று நாம் விசாரித்த போது, சில முஸ்லிம் அமைப்பினர், முன்னோட்டக் காட்சியைப் பார்த்து விட்டு டிவி நிலையத்துக்கு தொலைபேசி செய்து ஆட்சேபனை தெரிவித்ததாகவும், அதனால் டிவி நிர்வாகம் பின்வாங்கி விட்டதாகவும் அறிய முடிந்தது.

ஒரு நிகழ்ச்சியின் உள்ளடக்கம் என்னவென்றே தெரியாமல் அதன் முன்னோட்டத்தை மட்டுமே பார்த்து விட்டு அந்நிகழ்ச்சியையே முடக்க முயல்வது நியாயம்தானா? இத்தகைய அதிகாரத்தை இந்த அமைப்புகளுக்கு யார் வழங்கியது? டிவிக்காரர்களை மிரட்டும் இந்த பால்தாக்கரே தனத்துக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது?

முஸ்லிம்களைப் பற்றிய நல்ல செய்திகளே ஊடகங்களில் வருவதில்லை என்று ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்கிறோம். மறுபுறம் நமது அடாவடிகளால் இவ்வாறான நல்ல பதிவுகளை வரவிடாமல் தடுக்கிறோம். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?

முஸ்லிம்களிடமும் வலுவான ஊடகங்கள் இல்லை; வலுவான ஊடகங்களிலும் முஸ்லிம்கள் குறித்த அலசல்கள் வரக்கூடாது என்றால், பொது வெளியில் இருந்து முஸ்லிம்கள் தனிமைப் படுவதை எவராலும் தடுக்க முடியாது.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. ஊடக அரசியலை தெளிவாகப் புரிந்து கொண்ட நல்ல உள்ளங்கள் அதிகம் இருப்பீர்கள். அப்படிப் பட்டவர்கள் புதிய தலைமுறை டிவியை தொடர்பு கொண்டு அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் படி வேண்டுகோள் விடுங்கள்.

தொடர்பு எண்: 044-45969500 Fax: 044-45969536

அடுத்த வார 'ரெளத்ரம் பழகு' நிகழ்ச்சியில், தலாக் குறித்த அலசல் இடம்பெறுவதும், இடம்பெறாமல் இருப்பதும் உங்கள் கைகளிலேயே உள்ளது.

ஆளூர் ஷாநவாஸ்

Saturday, 29 June 2013

குமரி அனந்தன், வைகோ, ஸ்டாலின், பரிதி இன்றைய கலக்கல் அரசியல் கமெண்ட்டுகள்

1) நதிகளை தேசியமயமாக்க நடைபயணம் செல்ல தயார்: குமரி அனந்தன்

# நீங்க மட்டும் ஒத்தையில போனால் எப்படி? வைகோவையும் கூப்பிடுங்க வருவாரு, உங்களுக்கும் ஒரு பேச்சு துணைக்கு ஆகும்

2)இந்தியாவில் வேறு எங்கும் நடக்காதது; திமுக இயக்கம்தான் அந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது : ஸ்டாலின்

# குஷ்பு இடுப்ப கில்லுனத சொல்லுறாரோ

3)கோபாலபுரத்து கொள்ளையர்களின் பேச்சைக் கேட்டுத்தான் அம்மா அவர்களுக்கு எதிராக பேசினேன்..- அ.தி.மு.க.வில் இணைந்த பரிதி இளம் வழுதி.

# போலி என்கவுண்டர் ல ஈடுபடற பொலீஸ் சொல்ற கதையைவிட இது ரொம்ப வீக் கா இருக்கு
by Manushya Puthiran in FB

4) திமுக வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை - பரிதி இளம்வழுதி

# ஓ அதை தேடித்தான் அம்மா கட்சிக்கு போனிங்களா? 

திருநங்கைகளை அரசாங்கமே நம்பர் 9 என்று குறிப்பிடுவதா? கருணாநிதி கண்டனம்.

இந்தியா முழுவதும் ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது பொருளாதார கணக்கெடுப்பு படிவத்தில் ஆண் என்பதற்கு 1 என்றும், பெண் என்பதற்கு 2 என்றும் குறிப்பிட்டு விட்டு ஆண் பெண் அல்லாத பாலின பிரிவுக்கு 9 என்ற குறியீட்டு எண் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே திருநங்கைகளை 9 என்ற எண்ணைக் குறிப்பிட்டு தான் கிண்டல் செய்கிறார்கள், இப்போது அரசே எண்ணைக் குறிப்பிட்டிருப்பது எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது" என்று கூறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக அறிக்கை அளித்த திமுக தலைவர் கருணாநிதி திருநங்கைகளை 9 என்ற குறியீட்டு எண்ணை பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார், மேலும் அவரது ஆட்சி காலத்தில் ஆண் என்று குறிப்பிட M , பெண் என்று குறிப்பிட F , திருநங்கை என குறிப்பிட  T (Transgender) என்றும் பயன்படுத்தப்பட்டது என தெரிவித்தார்.

# கலக்கிட்டிங்க தலைவரே

# தலைவரே உங்க கட்சியில் சீட்டு கேட்ட கல்கி என்கிற திருநங்கைக்கு அடுத்த முறையாவது சீட்டு தருவிங்களா?

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்தார் விஜயகாந்த்

தேமுதிக எம்.எல்.ஏக்கள் 7 பேர் தொகுதி பிரச்சினைகளுக்காக முதல்வரை சந்தித்தோம் என்று கூறி ஜெயலலிதாவை சந்தித்
தனர், இதில் விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர்களான அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன் போன்றோரும் கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு கட்சி கட்சியாக சீட்டுக்கு அலைந்த மாஃபா பாண்டியராஜனும்  அடக்கம்.  பின் இவர்கள் அதிமுகவுக்கு ஜால்ரா அடிக்க தொடங்கினர். ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு வாக்களிக்க வேண்டிய இவர்கள் வாக்குகள் அதிமுகவுக்கு முக்கியமே இல்லையென்றாலும் அதிமுகவுக்கே வாக்களித்தனர். இந்நிலையில் இவர்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் விஜயகாந்த்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.  - சுந்தர்ராஜன்,
பேராவூரணி  - எம்.எல்.ஏ. அருண்பாண்டியன்,
திட்டக்குடி எம்.எல்.ஏ.  - தமிழழகன்,
ராதாபுரம் எம்.எல்.ஏ.  - மைக்கேல் ராயப்பன்,
செங்கம் தொகுதி எம்.எல்.ஏ.  - சுரேஷ்குமார்
சேர்ந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.  - சாந்தி ராஜமாணிக்கம்,
விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ - மாஃபா பாண்டியராஜன்

இனி வயசுக்கு வந்தா என்ன? வரலைன்னா என்ன?

தர்மபுரி கலெக்டர் ஆர்.லில்லி மாற்றம், மதுரை கலெக்டரும் மாற்றம் சாதித்ததா கிரானைட் கிங்கர்கள்

தர்மபுரி கலெக்டர் ஆர்.லில்லி மாற்றம், மதுரை கலெக்டரும் மாற்றம் சாதித்ததா கிரானைட் கிங்கர்கள்

முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டிற்கு செல்லும் முன் தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மதுரை, திருவண்ணாமலை மற்றும் தர்மபுரிக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

தர்மபுரியில் ஒரு சாதிக்கு பக்க சார்பாக செயல்படுகிறார் என்று பாமகவினரால் குற்றம் சாட்டப்பட்ட தர்மபுரி கலெக்டர் ஆர்.லில்லி தர்மபுரியிலிருந்து மாற்றப்பட்டது பாமகவினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆர்.லில்லி தற்போது வணிகவரிகள் துறை இணை ஆணையராக பதவியேற்க உள்ளார். தர்மபுரி கலெக்டராக கே.விவேகானந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று மதுரையின் கலெக்டராக இருந்து கிரானைட் திருடர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய அன்சுல் மிஸ்ரா வணிக வரித்துறை இணை ஆணையராக பதவி ஏற்கிறார்கள், இவரை மாற்ற கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிரானைட் கிங்கரர்கள் கடும் முயற்சி எடுத்தனர்.

Dharmapuri collector R.Lilli and Madurai collector Ansul mishra transferred from  their posts. PMK party cadres are happy about Lilli's transfer as PMK cadres criticise Collector lilli is supporting one caste for many occasions.

Ansul mishra had taken action against illegal Granite cutting.

தந்தி டிவியின் அச்சம் தவிர் நிகழ்ச்சியை தொகுக்கும் சர்ச்சை நாயகி குஷ்பு

தந்தி டிவியின் அச்சம் தவிர் நிகழ்ச்சியை தொகுக்கும் சர்ச்சை நாயகி குஷ்பு

மாறன்களின் ஆதிக்கம் மத்திய அரசில் தொலைத்தொடர்பு துறையில் இருந்து ஓய்ந்த பின் தென்னிந்தியாவெங்கும் சன் குழுமம் தவிர்த்த வேறு பல டிவிகள் பலம் பெற ஆரம்பித்தன. தமிழகத்தில் புதியதலைமுறை வெளிவந்தது தற்போது தந்தி டிவி கலக்கிக்கொண்டுள்ளது.

தந்தி டிவியில் ஏற்கனவே சீமான் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சி பிரபலமடைந்துள்ள நிலையில் அச்சம் தவிர் என்றொரு நிகழ்ச்சியை சர்ச்சையின் நாயகி குஷ்பு நடத்துகிறார். ஜூலை 7ம் தேதியிலிருந்து ஞாயிறு காலை 11மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்.

நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இது zee தமிழின் புகழ்பெற்ற சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை போலவே இருக்கும் என தெரிகிறது.

தம்மை சுற்றி நிகழும் அநியாயங்களை பற்றி பேசப்போவதாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் குஷ்புவாகவும் இருக்கும் நிலையில் சும்மாவே கர்ப்பு மேட்டரில் ஆரம்பித்து பாலுறவு என சர்ச்சையை கிளப்பும் குஷ்புவுக்கு இந்த நிகழ்ச்சி மிகுந்த சர்ச்சையையும் அதே சமயம் பெரிய விளம்பரத்தையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஷ்பு பெரிய முற்போக்களாராகவும் தைரியசாலியாகவும் காண்பிக்கப்படும் அதே நேரத்தில் திமுக தலைவர் பதவி குறித்த கருத்துக்காக ஸ்டாலின் ஆதரவாளார்கள் செருப்பை கொண்டு எறிந்த போதும் அவர் வீட்டை தாக்கிய போதும் அச்சத்தை தவிர்க்காமல் பம்மினார்.

# அச்சம் தவிர், மு.க.ஸ்டாலின் தவிர்த்து மற்றவர்களிடம்

Acham thavir program in Thanthi TV host by Actress Kushboo

அடுத்த முறை அபு சலீமை விட மாட்டோம், சோட்டா ஷகீல் சவால்

இந்த முறை தப்பிவிட்டான், அடுத்த முறை அபு சலீமை விட மாட்டோம், சோட்டா ஷகீல் சவால்

இரு நாட்களுக்கு முன் தாதா அபுசலீம் மும்பை சிறையில் சுடப்பட்ட போதும் உயிர் பிழைத்துவிட்டான், இது தொடர்பாக ஒரு பத்திரிக்கைக்கு பேசிய சோட்டா ஷகீல் குறிப்பிட்டதாவது இம்முறை அபு சலீம் தப்பிவிட்டான், ஆனால் அடுத்த முறை விடமாட்டோம் என்றும் தாவூத் இப்ராஹிமுக்கு துரோகம் இழைத்துவிட்டு எதிரி கேங்கான சோட்டா ராஜனுடன் சேர்ந்துவிட்டான் அபுசலீம் என்றும் எதிரியின் நண்பனும் எங்களுக்கு எதிரியே என்றும் குறிப்பிட்டுள்ளான், இவன் மலேசியாவிலிருந்து செயல்படுவதாகவும் அங்கிருந்தே மும்பையை கண்ட்ரோல் செய்வதாகவும் கூறப்படுகிறது.

# இவனுங்களை மட்டும் புடிக்கவே முடியாதா இந்திய அரசால்?

Abu saleem can not escape from us said by chotta shakeel

இலங்கைக்கு ராணுவப்பயிற்சி அளிக்க பாக்கிஸ்தான் முன்வந்துள்ளது.

கொழும்புக்கு நான்கு நாள் பயணமாக சென்றுள்ள பாக்கிஸ்தான் இராணுவ தலைவர் அறிவித்துள்ளார். ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கை ராணுவத்துக்கு தமிழகத்திலும் இந்தியாவிலும் பயிற்சி அளிக்க கூடாது என்று பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் பாக்கிஸ்தானின் இந்த அறிவிப்பை பயன்படுத்தி சில ஊடகங்கள் பாருங்கள் நாம் பயிற்சி அளிக்கவில்லை என்றால் நம் எதிரி பாக்கிஸ்தான் அளிக்கிறது என்று மக்களை குழப்பி வருகின்றன. இந்த ஊடகங்களுக்கு எதிரி எப்படியும் நம் வீட்டை கொளுத்திவிடுவான், அதனால் நாமே நம் வீட்டை கொளுத்திவிடலாம் என்று கூட இவர்கள் ஆலோசனை தந்தாலும் தருவார்கள்.

# இவர்களுக்கு பாக்கிஸ்தான் எதிரி நாடு, தமிழ் உணர்வாளர்களுக்கோ இலங்கை எதிரி நாடு.

Pakistan ready to provide military training for srilankan army

அன்னக்கொடி - FIR

அன்னக்கொடி - FIR

லேட்டஸ்டாக அரசியல் உலகில் எரிந்து கொண்டிருக்கும் அதே கதைதான், காதலுக்கு சாதியில்லை, செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான ஆடு மேய்க்கும் கதாநாயகன் நாயகியை காதலிக்கிறார், இது தெரிந்து வில்லன் சதி செய்து ஹீரோவை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு நாயகியை திருமணம் செய்து கொள்கிறார், பிறகு தான் தெரியவருகிறது சேடிஸ்ட் வில்லன் ஒரு "கூவாத சேவல்" என்று, வில்லனை விட்டு வெளியேறிய ஹீரோவை சேர்ந்தாரா என்பது தான் கதை.

இந்த படத்தை எடுத்தது பாரதிராஜா தானா?  இயக்கம், திரைக்கதை, எடிட்டிங் என அத்தனையும் சொதப்பல். இந்த படத்தை எடுத்ததற்கு எடுக்காமலே இருந்திருக்கலாம்.

மதிப்பெண்கள் 2.5/5.0

# இது சூது கவ்வும் காலம், உங்களுக்கு கலைஞர் டிவி சீரியல் ஸ்லாட் எதுவும் கிடைக்குதா பாருங்க பாரதிராஜா சார்.

அதிமுகவில் திமுகவின் பரிதி இளம்வழுதி மற்றும் பாமக பொன்னுசாமி

திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்தார்

சில நாட்களுக்கு முன்பு தான் மதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இணைந்திருந்தார், தற்பொழுது தமிழகத்தின் மூத்த கட்சியான திமுகவில் இருந்து ஒருவர் அதிமுகவில் இணைந்தது திமுகவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

திமுகவின் குடும்ப அரசியலே காரணம் என அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.

திமுக வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்ற பரிதி இளம்வழுதி அதைத்தேடி அதிமுகவுக்கு சென்றிருப்பது உச்சகட்ட நகைச்சுவை.

இது குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி கருணாநிதி கடந்த காலத்தில் பருதி அவர்கள் சட்ட மன்றத்தில் தனியாக நின்று எதிர் கட்சிகளை எதிர்கொண்டதை நினைப்போம்; இதை மறப்போம் என்றார்.

இதே போன்று இன்று பாமகவின் முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்னுசாமியும் அதிமுகவில் இணைந்தார், இவர் சமீபகாலமாக பாமகவில் இருந்து ஒதுங்கி இருந்தார். மேலும் இவர் தாழ்த்தபட்ட மக்களிடம் விரோதபோக்கு காட்டுவதால் பாமகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

# கடைசியில் திமுகவுக்கும் குடும்பம் மட்டும் தான் மிஞ்சும் போலயே

அணுஉலை ஆதரவு அரசியல் கட்சிகள் ஊருக்குள் வராதீர் - இடிந்தகரை மக்கள்

"அணுஉலை ஆதரவு அரசியல் கட்சிகள் ஊருக்குள் வராதீர் - இடிந்தகரை கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகை"

கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான அரசியல் கட்சிகளுக்கோ, அல்லது அவர்களின் ஆதரவோடு போட்டியிடும் வேட்பாளர்களுக்கோ நாங்கள் வாக்களிக்க மாட்டோம்; தயவுசெய்து ஆதரவு கேட்டு ஊருக்குள் வராதீர்.

- இடிந்தகரை மக்கள்

# நீண்ட நெடிய அறவழிப்போராட்டத்தை மேற்கொள்ளும் இம்மக்களை வாழ்த்துவோம்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media