ஆதலால் காதல் செய்வீர் FIR
படத்தின் இயக்குனர் சுசீந்திரன் ஏற்கனவே வெண்ணிலா கபடி குழு, அழகர் சாமியின் குதிரை, நான் மகான் அல்ல போன்ற சிறப்பான படங்களை எடுத்தவர் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்த படம்.
படத்தின் கதை இந்த கால டீன் ஏன் காதல் கதை, அதில் சாதி புகுந்தால் ஏற்படும் பிரச்சினை அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது தான், எங்கே "கெளரவம்" படம் போல ஓவர் டோஸ் கருத்து சொல்கிற படமாகிவிடாமல் அளவாக அழகாக எதார்த்தமாக எடுத்துள்ளார் இயக்குனர்.
டீன் ஏஜ் விளையாட்டு காதல் ஒரு நேரத்தில் மேட்டராகி மேட்டர் கருவாகிவிடுகிறது, பையனும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ள சாதி தடையாகிவிடுகிறது. பையனின் தந்தையின் சாதி, அரசியல் பின்புலன்கள் பெண்ணை கருகலைக்க சொல்ல கடைசியில் எப்படி அனாதைகள் பிறக்கிறார்கள் என்று சொல்லி முடிகிறது படம்.
முற்பகுதி படம் விளையாட்டு காதலும் சிரிப்புமாக சென்றாலும் பையனின் தந்தையாக நடிக்கும் ஜெயபிரகாஷ், பெண்ணின் தாயாக நடிக்கும் துளசி ஆகியோரின் சிறப்பான நடிப்பு, இரண்டாம் பகுதி படத்தின் கனம் எல்லாம் படம் ஒரு சிறந்த படமாக அமைய வைத்துள்ளது.
ஆதலால் காதல் செய்வீர் என்று சொல்லிவிட்டு காதல் செய்தால் கருவாகி உருவாகி என்னென்னவாகும் என்ற விபரீதத்தை எடுத்து சொல்லி பயமுறுத்துகிறது.
ஆதலால் காதல் செய்வீர் இளைஞர்களுக்கான படம் மட்டுமல்ல, பெற்றோர்களுக்குமான படமும் கூட
மதிப்பெண்கள் 3.5/5.0
படம் பற்றிய உங்கள் கருத்தை கமெண்ட்டில் போடவும்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.