திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது நல்ல சொலவடை தான். ஆனால் திரவியம் தேடி என்ற இடம் நமது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகப்பற்ற இடம் என்றால் என்ன செய்வது? அந்த மாதிரியா சூழல் தற்போது நிலவி வரும் இடம் தான் சவுதி அரேபியா. இது குறித்து நேற்றே ஒரு செய்தியை தந்திருந்தோம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சவுதியில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு எந்த வித சங்கடங்களும் இல்லாமல் தான் இருந்தது, வளர்ந்த நாடான அமெரிக்கா அவுட் சோர்சிங் முறையை கட்டுக்குள் கொண்டு வர எடுத்த சில நடவடிக்கைகள் தொடர்ந்து மற்ற நாடுகளும் அதை கையில் எடுக்க ஆரம்பித்தன. இந்தியர்கள் அதிகமாக வேலை செய்யும் சவுதி அரேபியாவும் அதில் ஒன்று.
பாதுகாப்பின்மை, கடுமையான சட்ட திருத்தங்கள், வேலை செய்யும் இடத்தில் அவமானங்கள் என தாயகத்திற்கு திரும்பும் மனநிலையில் சுமார் 27000 தமிழர்கள் அங்கே சிக்கி உள்ளனர், அவர்களை மீட்க சில சமூக அமைப்புகள் போராடி வந்தாலும் இந்தியா அதற்கு உறுதுணையாக இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
இந்நிலையில் சவுதியில் சிக்கியுள்ள சுமார் 27000 தமிழர்களை மீட்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் அப்துல் ரஹீம் அவர்களின் வ்ழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி நமது நாட்டின் குடிமகனுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டியது நம் நாட்டின் கடமையாகும். அவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது குறித்து உரிய தகவல்களை மத்திய அரசும், மாநில அரசும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்
உற்றார் உறவினர்களை பிரிந்து பொருள் ஈட்ட வெளிநாடு சென்று உயிருக்கே பாதுகாப்பில்லாமல் இருக்கும் நமது சகோதர்கள் நல்லபடியாக திரும்பி தாயகம் வரவேண்டும் என அனைத்து நண்பர்களும் பிரார்த்திப்போம்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.