பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காமல் இந்திய ராணுவத்தினர் மீது தொடத்த திடீர் தாக்குதலினால் இந்திய வீரர்கள் ஐந்து பேர் பலியான சம்பத்தை ஏற்கனவே நாம் சொல்லியிருந்தோம். அவர்களில் நான்கு பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் பாட்னாவை சேர்ந்தவர், சில தினங்களுக்கு முன்பு தான் அவர்களது இறுதி சடங்கு நடந்தது.
பீகார் மாநில ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் பீம்சிங் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் காவல் பணிகளில் சேருவதே உயிர் தியாகம் செய்யத்தான் என்றார், வேளாந்துறை அமைச்சரோ இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தொடர்பு இல்லை, இது தீவிரவாதிகளின் தாக்குதல் என்றார்.
அவர்கள் கூறிய கருத்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமாரிடம் இது குறித்து கேட்கப்பட்டது. இரு அமைச்சர்களின் கருத்துக்கு வருத்தம் தெரிவித்த நிதீஷ்குமார், கட்சி தலைவர் சரத்யாதவ் அவர்கள் இரு அமைச்சர்களின் கருத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டிஸ் அனுப்பியுள்ளார் என்று கூறினார்.
இதனிடையில் இரு அமைச்சர்களின் கருத்து உயிர் தியாகம் செய்த வீரர்களை கொச்சை படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டுமக்களின் உணர்வுகளையும் இழிவு படுத்துவதாக இருக்கிறது என்று பாட்னா உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராம்சந்தோஷ் ராய் இவர்கள் இருவர் மீதும் தோச துரோக வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் வீரர்களின் உடல்கள் பாட்னா விமானநிலையம் வந்த பொழுது சீருடையில் செல்லாமல் சாதாரன உடையில் சென்ற போலிஸ் சூப்பிரண்டு மணிஷ்குமார் சிண்ஹா மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது. பாட்னா வீரர் இறுதி சடங்குக்கு செல்லாமல் மறுநாள் அவர்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய தொழில்நுட்பதுறை அமைச்சர் கவுதம் சிங்கிடம் ஏன் நேற்று வரவில்லை என்று கேட்டதற்கு, அது ஒரு பெரிய விசயமா என கேட்டுள்ளார். அவர் மீதும் வழக்கு பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.