கர்நாடகா மாண்டியா பகுதி எம்.பி.யாக இருந்த சலுவரய்யா சாமி தமது பதவியை ராஜினாமா செய்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார், அதனால் அப்பகுதியில் இடைதேர்தல் நடைபெறுகிறது, அத்தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த மூன்றாம் தேதி மனுதாக்கல் செய்த நடிகை ரம்யா தமது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினராவார். இவரது பெயரை கர்நாடக முதல்வர் சித்ரம்மையாவும், கார்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் கட்சி மேலிடத்திற்கு சிபாரிசு செய்ததாக தெரிகிறது. இவர் ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தொகுதிகளில் அனைத்தும் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.
தமிழில் குத்து படம் மூலம் அறிமுகமான ரம்யா. கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். காவேரி பிரச்சனைக்காக கர்நாடக அரசை எதிர்த்து நடிகர்கள் நடத்திய அடையாள உண்ணாவிரதத்தில் ரம்யா கலந்து கொள்ளாதது மட்டுமல்லாது, கர்நாடகா சார்பில் நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு சர்ச்சை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் அவரை எதிர்த்து மதசார்பற்ற ஜனதாதளம் சார்ப்பில் போட்டியிடும் புட்டராஜுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டவேரவை உறுப்பினர் சீனிவாஸ், ரம்யா தனது வேட்புமனுவில் தந்தை பெயரை குறிப்பிடவில்லை, என்ன சாதி என்றும் குறிப்பிடவில்லை மேலும் அவர் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் அல்ல, அவருக்கு இத்தொகுதியின் தேவைகள் குறித்து ஒன்றும் தெரியாது என பேசியது பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.