BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 15 September 2013

சிவகாமி ஐஏஎஸ் ஏன் தமிழ் பெண்களை சிங்கள ராணுவத்திற்கு அனுப்பி வைத்து பாலியல் தொழில் செய்த டக்ளஸ் தேவானந்தா இயக்கம் பற்றி பேசவில்லை



விடுதலை புலிகள் மீது சிங்கள எதிரியும் கூட கூறாத அபாண்டமான குற்றச்சாட்டாக புலிகள் பெண் போராளிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்த வைத்திருந்தார்கள் என்று சிவகாமி ஐஏஎஸ் புதியதலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில் பேசினார்.

இது சிவகாமி ஐஏஎஸ் மீது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது  ஆதாரமற்ற பொய்யான உறுதி படுத்தாத ஒரு செய்தியை அவதூறு செய்ய வேண்டுமென்றே கூறியுள்ள சிவகாமி ஐஏஎஸ்க்கு உண்மையிலேயே தமிழ் பெண்களை வற்புறுத்தி பாலியல் தொழிலில் அதுவும் சிங்கள ராணுவத்திடமே கூட்டி கொடுத்தது டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி என்று விக்கிலீக்ஸ்சின் விக்கி கேபிள்ஸ் இல் வெளியாகியுள்ளது தெரியாதா? ஆதாரங்கள் இருக்கும் போது ஏன் இது குறித்து பேசவில்லை சிவகாமி ஐஏஎஸ் என்ற கேள்வி எழுகிறது.

சமூக சமத்துவப்படை என்ற ஒரு இயக்கத்தை தலித்களுக்கு ஆதரவாக ஆரம்பித்து நடத்தும் சிவகாமி ஐஏஎஸ் அவர்கள் 1986 நவம்பர் 1ம் தேதி திருநாவுக்கரசு என்ற தலித் இளைஞனை சுட்டுக்கொன்றுவிட்டு இன்று வரை இலங்கையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி இயக்கம் பற்றியும் அந்த ஈபிடிபி இயக்கத்தவர்கள் தமிழ் பெண்களை கட்டாயப்படுத்தி சிங்கள ராணுவ வீரர்களுக்கு கூட்டி கொடுத்து பணம் பெற்றது பற்றியும் ஏன் பேசவில்லை என்றும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

2007ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அதன் தலைமைக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டிருக்கும் செய்தி என்னவென்றால் இளம் தமிழ் பெண்கள் கட்டாயப்படுத்தி ஒவ்வொரு நாளும் ஒரு பெண் 5 அல்லது 6 சிங்கள ராணுவ வீரர்களிடம் செக்ஸ் வைத்து கொள்ள ஈபிடிபி கட்சியினரால் பலவந்தப்படுத்தப்பட்டுள்ளனர் , இந்த இளம்பெண்களின் பெற்றோர்கள் இது குறித்து எந்த புகாரும் நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை என்றும் இது வெளியில் தெரிந்தால் பெண்களின் திருமணம் என்பது நடக்காத ஒன்றாகிவிடும் என்பதாலும் உயிர் பயத்தாலும் இவர்கள் இது குறித்து புகார் தெரிவிக்கவில்லை என்றும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட கேபிள்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

https://www.wikileaks.org/plusd/cables/07COLOMBO728_a.html

 who stated that the EPDP works in  concert with the Sri Lanka Army (SLA) to operate Tamil  prostitution rings for the soldiers.  Ganesh stated that
young women were taken and forced to have sex with between five and ten soldiers a night.  Sometimes they are paid  approximately a dollar for each "service."  The young women's parents are unable to complain to authorities for fear of retribution and because doing so would ruin the girls' reputation, making it impossible for them ever to marry. 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media