விஜய் சேதுபதியின் தொடர்ந்த வெற்றிபடங்கள், காமெடி ட்ரெண்ட்டில் வரிசையாக வென்ற படங்கள் புது இயக்குனர்கள் என எதிர்பார்ப்பை எகிற வைத்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.
படம் மூன்று தனி தனி கதைகளை மிக்ஸிங் போட்டு ஒரு புள்ளியில் இணைத்து காக்டெயிலாக தந்துள்ளார்கள், ஆமாம் படம் முழுக்க ஒரே டாஸ்மாக் வாசனை, எங்கே நாம தியேட்டரில் இருக்கோமா? டாஸ்மாக் பாரில் இருக்கோமா என்று சந்தேகம் வந்துவிடும், சீட்டில் நம்ம பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் அடித்திருக்கும் செண்ட் கூட சரக்கு ஸ்மெல்லாக இருக்கும் அளவுக்கு டாஸ்மாக், குடி சீன்கள்.
சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி, அவர் எதிர் வீட்டு குமாரியை ஒன் சைடாக டாவடிக்க அது சுகர் பேஷண்ட் தாதா பசுபதியின் பாரில் பஞ்சாயத்துக்கு போகிறது.
மங்காத்தா படத்தில் நடித்த அஸ்வினுக்கும் சுவாதிக்கும் காதல், அவரது வேலையில் ஏகப்பட பிரச்சனைகள் அதனால் குடித்து விட்டு வண்டியை ஓட்டி ஒரு பெண்ணுக்கு விபத்து ஏற்படுத்தி விடுகிறார், உயிருக்கு போராடும் இந்த பெண்மணியை காப்பாற்ற சுமார் மூஞ்சி குமாரின் அரிய வகை ரத்தம் தேவைப்படுகிறது.
பாரில் நடைபெறும் கொலை, கொலையாளிகள் விஜய் சேதுபதியின் செல்போனை சுட்டுவிடுகிறார்கள். இவைகளை அணைத்தையும் ஒரே ட்ராக்கில் கொண்டு வந்து சஸ்பென்ஸ்களுக்கு முடிவு கட்டுகிறார்கள்.
படம் காமெடி கீமெடி என்று போனால் கடைசி அரைமணி நேர காமெடி தான் நன்றாக உள்ளது, மீதி நேரமெல்லாம் மகா மொக்கை. வடிவேலு இல்லாத குறை நன்றாக தெரிகிறது, வடிவேலு ஒரு படத்தில் அரைமணி நேரத்தில் செய்யும் காமெடி சாகசங்களை நான்கு முழு நீள காமெடி படங்களால் கூட தீர்த்து வைக்க முடியவில்லை.
சுமார் மூஞ்சி குமார் படமும் குமார் மூஞ்சியை போல சுமார் தான்.
நீங்கள் படம் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்தை கமெண்ட்டில் எழுதுங்கள்
மதிப்பெண்கள் 3 / 5

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.