BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 10 November 2013

காஸ்ட்லி "ஆடி" கார் வாங்கிய சிவகார்த்தியின், பொறாமையில் பொசுங்கும் திரையுலகம்



விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி போட்டி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பின், டான்ஸ் புரோகிராமில் போட்டியாளராக கலந்து கொண்டார், அதன் பின் விஜய் டிவியில் நிகழ்ச்சி கேம்பயரிங் செய்தவர். மீடியா, சினிமா பின்னணி எதுவுமின்றி கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி முன்னேறினார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனின் தந்தையும் தாயும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள், காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். மாமாவின் அரவணைப்பில் வளர்ந்த சிவகார்த்திகேயன் எம்.பி.ஏ படித்துக்கொண்டிருந்த போது கிடைத்த வாய்ப்பு தான் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் தன்னுடைய மிமிக்ரி திறமையை காட்டி வென்றார், அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியவரை மெரினா படத்தில் இயக்குனர் பாண்டியராஜன் நடிக்க வைத்தார், மூன்று படத்தில் காமெடி ஆக்டராக தனுஷ் உடன் சப்போர்ட்டிங்காக வந்தவர். சினிமாவில் வாய்ப்புகள் ஆரம்பிக்கும் நேரத்திலேயே மாமா பெண்ணை கல்யாணம் கட்டி சட்டுபுட்டென குடும்பஸ்தராகவும் ஆகிவிட்டார்.


மெரினா தோல்வியைடைந்தாலும் எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா இரண்டும் கை கொடுக்க அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடித்தார், அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக இன்று நட்சத்திர நடிகராகிவிட்டார். பிந்து மாதவி உடன் கிசு கிசுக்கப்பட்டார், தற்போது தான் சிவகார்த்திகேயனுக்கு அவருக்கு  ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

சத்யம் தியேட்டர் வாசலில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட ரிலீசின் போது சிவகார்த்திகேயன் பேனர் 60 அடிக்கு மேலே இருக்க, நடிகர் விஜய்யின் சிறிய பேனர் கீழே இருந்தது. ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த, சராசரி மனிதராக நம்மிடையே சுற்றிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன் திடீரென பெரிய ஹீரோவாகிவிட்டார் என்னும் போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கே பொறாமை வரும் போது, சினிமாவில் பல ஆண்டுகளாக ஊறிக்கிடப்பவர்களுக்கு பொறாமை எழாமலா இருக்கும்.

சில நாட்களுக்கு முன் ஒரு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி எங்க காலத்தில் செட்டில் ஆகனும்னா ஒரு 15 படங்களிலாவது ஹீரோவாக நடிக்க வேண்டும், இப்போதெல்லாம் ஐந்து ஆறு படங்களில் நடித்துவிட்டாலே செட்டில் ஆகிவிட முடிகிறது என்று பேசியுள்ளார், இது சிவ கார்த்திகேயனை மனதில் வைத்தே என்கிறார்கள். தனுஷ் என்ற புளியங்கொம்பை பிடித்தவர் தனக்கு எது சரியாக வருமோ அந்த காமெடியை கணக்கு பண்ணி படங்களில் நடித்து வெற்றி ஹீரோகிவிட்டார். சிவகார்த்திகேயன் காசு விசயத்தில் மட்டும் படு கெட்டியாம், தனது சம்பளத்தை அது போனமாசம் இது இந்த மாசம் என்ற ரேஞ்சில் மாதா மாதாம் ஏற்றியவர் தற்போது வந்து நிற்பது 5 கோடியாம். காசு விசயத்தில் படு கெட்டியாம் இந்த ஹீரோ.

சினிமாவில் வாரிசுகளும் பழம் தின்று கொட்டை போட்டவர்களும் மட்டுமே வெற்றியை சுவைத்து தாக்குபிடிக்க முடிந்த கோலிவுட்டில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சந்தானம், பரோட்டா சூரி போன்ற சினிமா பின்புலம் எதுவும் இல்லாத எளிய‌வர்களும் வெற்றி பெறுவது சினிமா உலகம் ஒரு ஆரோக்கியமான போக்கில் சென்றுகொண்டுள்ளதை காட்டுகிறது.

வாழ்த்துகள் சிவகார்த்திகேயன், உங்களுக்கு கிடைத்துள்ளது மிகப்பெரிய வெற்றியும் வாய்ப்பும், இந்த வெற்றியும் அது தரும் புகழும் பணமும் உலகத்தையே தன் காலுக்கு கீழ் தான் என்ற மிதப்பை தரும், குடும்பம், பணம், புகழ் அனைத்தையும் காப்பாற்றிக்கொள்வது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. ராமராஜன், சந்திரபாபு, சாவித்ரி  போன்ற மாபெரும் வெற்றியாளர்களை தன் காலுக்கு கீழ் போட்டி நசுக்கிய உலகம் சினிமா உலகம், பார்த்து சூதானமா இருந்துக்குங்க பாஸூ


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media