BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 10 November 2013

பேரரசர் ராஜ ராஜ சோழனின் 1028வது சதய விழா இன்று(நவம்பர் 10,11) தஞ்சையில்

பேரரசர் ராஜ ராஜ சோழனின் 1028வது சதய விழா இன்று(நவம்பர் 10,11) தஞ்சையில் கொண்டாடப்படுகிறது

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சோழமன்னன் ராஜ ராஜ சோழன் சதய நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன, எனவே ஒவ்வொரு ஆண்டும் ராஜ ராஜன் பிறந்த நாள் விழாவாக சதயவிழா கொண்டாடப்படுகிறது.



தஞ்சையை தலைநகராக கொண்டு 30 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி செய்து பல போர்களில் வெற்றி பெற்று சோழ அரசை அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு அரியணையில் இருக்க வைத்த காலம் அது.

 பேரரசர் ராஜராஜன் தஞ்சையில் சிறப்பு வாய்ந்த பெரிய கோவிலை கட்டியதன் வாயிலாக தமிழர்களின் பெருமையை உலகறியச்செய்தவர். அறுபதாயிரம் யானைப்படையும், ஒரு லட்சம் குதிரைப் படையும், ஒன்றரை லட்சம் காலாட்படையும், ஆகியவற்றை உள்ளடக்கிய வலிமையான இராணுவத்தை கொண்டு ஆட்சி புரிந்துள்ளான்.

இந்தியாவின் முதற் கப்பற்படை அமைத்து கடல் கடந்து நாடுகளை வென்ற பெருமைக்குரிய மன்னன் ராஜராஜன். தஞ்சை, உறையூர் மற்றும் காஞ்சி மூன்று தலைநகரையும் கொண்ட தமிழ் நாட்டை அமைத்ததால் மும்முடிச்சோழன் என்ற சிறப்பு வாய்ந்த பெயரால் அழைக்கப்பட்டவன். இத்தகைய பெருமைக்குரிய மாமன்னனின் 1028 வது சதயவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சதயவிழாவை ஒட்டி இன்றும் நாளையும் இரண்டு நாட்களும் கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், வழக்காடு மன்றம், பட்டிமன்றம், நாட்டிய நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

# ராஜராஜசோழன் எங்கள் சாதியென்று தமிழ்நாட்டில் பல சாதிகள் போஸ்டர்களிலும் பேஸ்புக்கிலும் அடிதடியே நடத்திக்கொண்டுள்ளார்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media