நியூ யார்க் டைம் இணையதளத்தில் 2014ம் ஆண்டில் பார்க்கப்பட வேண்டிய 52 சுற்றுலா இடங்கள் என்ற கட்டுரையில், சென்னையும் இடம் பெற்றிருக்கிறது.
தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னை, தேசிய கலாச்சார தலைநகரமும் ஆகும். ஆடற்கலை கற்பிக்கப்படும் கலாக் ஷேத்ரா மற்றும் கர்நாடக சங்கீதம் கற்பிக்கப்படும் மியூசிக் அகாடமி போன்ற புகழ் பெற்ற இடங்கள் சென்னை நகரில் உள்ளது. சிவபெருமான் ஸ்தலமான கபாலீஸ்வரர் கோயில் உட்பட பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இங்கு நிறைய இருக்கின்றது. பார்க் ஹயாத் போன்ற மிக பெரிய நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் க்ளப்புகள், ரெஸ்டாரன்ட்டுகள் என கவர்ச்சிகரமாக இருக்கிறது இந்த நகரம் என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.