டெல்லியில் நடைபெறும் போதை மருந்து விற்பனையில் தொடர்புள்ளதாக கூறப்படும் உகாண்டா நாட்டு பெண்களை உள்ளடக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களை கைது செய்யும்படியும் டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை ஏற்று போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. கடமையை செய்ய தவறிய போலீசாரை பணி நீக்கம் செய்ய வேண்டுமென, மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே வீட்டை முற்றுகையிடச் சென்றார் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர்.
மேலும், காவல் துறையை சீர் படுத்துவதற்காக நடத்தப்படும், இந்த 10 நாள் போராட்டத்தில், டெல்லி மக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் கேஜ்ரிவால்.
போலீசார் தடை விதித்துள்ள இந்த போராட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடந்து விட கூடாது என்பதால், 4000 போலீசார் காவலில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், ஜந்தர் மந்தர் பகுதிக்கு அதிரடிப்படையினரை டெல்லி போலீசார் வரவழைத்துள்ளனர்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.