“இனி, நாங்கள் அதிமுக, திமுக நிழலில்கூட ஒதுங்க மாட்டோம்’’ என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நேற்று, பாஜக குழுவினர் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் மதிமுக தலைமையகம் சென்றிருந்தனர். அப்பொழுது பேசிய வைகோ, "ஈழத் தமிழர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தது வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிதான்." என்று கூறினார். வாஜ்பாய் 2000ம் ஆண்டு, தன் பிறந்த நாள் அன்று போன் செய்து வாழ்த்து தெரிவித்தார் என்றும் கூறியிருந்தார்.
மோடியை பற்றி பேசுகையில், "மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமையப்போவது நிச்சயம், அந்த ஆட்சி ஐந்தாண்டுகள் முழுமையாக நீடிக்க வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம்’’ என்றும், "இனி ஒருமுறை நாங்கள் திமுக, அதிமுக நிழலில் கூட ஒதுங்க மாட்டோம்" என்றும் வைகோ கூறினார். அடுத்த மாதம், சென்னையில் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தானும் கட்டாயம் கலந்து கொள்ள போவதாக பா.ஜ.க வினரிடம் உறுதியும் கொடுத்தார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.