மதுரையில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ தமிழ் இலக்கியம் படித்து வருகிறார், தங்க ரத்தினம். இவர் தந்தை சுமை தூக்கும் தொழிலாளி. தங்க ரத்தினம், பன்னிரெண்டாம் வகுப்பில், தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றிருந்தார். இவர் அக்காவிற்கு திருமணம் நடந்து, வரதட்சணை கொடுக்காத காரணத்தால், ஒரே வாரத்தில் தாய் வீட்டிற்கு அனுப்ப பட்டார். இந்நிலையில், ஒரு ஆண்டு கடந்து விட்டதால், அவர் கணவருக்கு இரண்டாவது திருமணம் நடத்த ஏற்பாடுகள் தொடங்கியது.
இதனால் ஆத்திரம் அடைந்த தங்கரத்தினம், தன் அக்காள் மாமியாரிடம் பேச நேரில் சென்றார். வாக்குவாதம் நடைப் பெற்று கொண்டிருக்கும் போது, அக்காள் மாமியாரை அரிவாளால் கழுத்து, கால், கையில் வெட்டி கொன்றார். இதையடுத்து, தங்கரத்தினம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.