ஞான பீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல்நலக் குறைவு காரணமாக, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
80 வயதான இவர், கடந்த சில மாதங்களாகவே, நினைவாற்றல் இழந்து இருந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவரது நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
1950களில் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயகாந்தன், மத்திய அரசின் இலக்கியத்துக்கான மிக உயரிதாகக் கருதப்படும் ஞான பீட விருதைப் பெற்றவர். இவரது படைப்புகள் 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்' , 'சினிமாவுக்கு போன சித்தாளு'முதலான பல படைப்புகளால் கவனத்தை ஈர்த்தவர்.
தமிழ் இலக்கிய உலகில், ஜே.கே என்று அழைக்கப்படும் ஜெயகாந்தனுக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு.
தனது தைரியமான, வித்தியாசமான, ஆழமான எழுத்துகளால் சமூகத்தைப் பிரதிபலித்த எழுத்துலகின் பீஷ்மராக கருதப்பட்ட ஜெயகாந்தன், இளம் எழுத்தாளர்கள் பலருக்கும் எழுத்துலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.