கேளம்பாக்கம் அருகே உள்ள சிறுசேரி சிப்காட் வளாகத்தில், டிசிஎஸ் பெண் ஊழியர் உமா மகேஸ்வேரி கொலை செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13–ந் தேதி இரவு பணிமுடிந்து கேளம்பாக்கத்தில் தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு கிளம்பி சென்ற அவர் காணாமல் போய் இருந்தார்.
இந்நிலையில், நேற்று காலையில் சிப்காட் வளாகத்திலேயே புதர் மண்டிக் கிடந்த ஒரு பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அருகில் கிடந்த அடையாள அட்டையை வைத்துதான் இறந்து கிடந்தது உமா மகேஸ்வரி என்பதை போலீசார் உறுதி செய்தனர். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.
உமா மகேஸ்வரி தினமும், தனது நிறுவனத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரம் நடந்து சென்றே மெயின் வாசலுக்கு வந்து பின்னர் பஸ் பிடித்து, மேடவாக்கத்துக்கு சென்று வந்துள்ளார். கடந்த 13–ந் தேதி அன்று, இரவு 10 மணியளவில் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போதுதான் இவரை யாரோ புதருக்குள் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனர். அவரது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பலமான கத்திக்குத்து காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
உமா மகேஸ்வரி கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெரும் மர்மாக இருக்கும் இக்கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.