
'வண்ண வண்ணப் பூக்கள்' படத்தில் பாலு மகேந்திராவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் மௌனிகா. அதன் பிறகு பாலு மகேந்திரா இயக்கிய கதை நேரம் குறும்படத் தொடரில் பல படங்களில் நடித்துள்ளார். 'மௌனிகாவும் என் மனைவிதான்' என்று 2004-ம் ஆண்டு பகிரங்கமாக அறிவித்தார் பாலு மகேந்திரா. 1998-ம் ஆண்டு கோயிலில் வைத்து தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டதாக ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
இது குறித்து மௌனிகா பேசுகையில், "பாலுமகேந்திரா என் கணவர். கடந்த 1993-ம் ஆண்டு முதல் அவருக்கும் எனக்கும் தொடர்பு உள்ளது. 16 வருடங்களுக்கு முன்பு (1998-ம் ஆண்டில்) நாங்கள் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். அன்று முதல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். அவர் இறந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு ஓடினேன். ஆனால் அவர் உடலைப் பார்க்க என்னை சிலர் அனுமதிக்கவில்லை. பொதுவாக எல்லா 2-வது மனைவிகளுக்கும் நடக்கும் கொடுமைதான் இது என்பது எனக்குப் புரிந்தாலும், இந்தக் கொடுமையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை,'' என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.