பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நேற்று மத்திய பிரதேச மாநிலம் பரேலி பொதுக் கூட்டத்தில் பேச திட்டமிட்டு இருந்தார். இதற்காக டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனியார் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவர் ஹெலிகாப்டரில் அமர்ந்த நிலையில் அது புறப்பட்டுச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. 3 மணி நேரம் தாமதத்துக்கு பிறகே ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதுவரை அவர் ஹெலிகாப்டரிலேயே அமர்ந்து இருந்தார்.
இதன் காரணமாக மோடி தாமதமாக கூட்டத்துக்கு சென்று பேசினார். அதுவரை மக்கள் வெயிலில் அவதிப்பட்டனர். தாமதத்துக்கு வருத்தம் தெரிவித்து, பொது மக்களிடம் மன்னிப்பு கோரிய மோடி இந்த தாமதத்துக்கு சதி காரணமா? என்று தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே ஹெலிகாப்டர் தாமதமாக புறப்பட்டதற்கு தனியார் விமான நிறுவனம்தான் காரணம் என்று மத்திய விமான போக்குவரத்து துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனம் ஹெலிகாப்டர் பயணம் செய்யும் இடம், நேரம் போன்ற சுற்றுப் பயண திட்டங்களை கடைசி நேரத்தில் தாமதமாகத்தான் கொடுத்தது. மேலும் பரேலி விமான நிலையம் விமானப்படை கட்டுப்பாட்டில் இருப்பதால் விமானப்படை அனுமதியும் கடைசி நிமிடத்தில்தான் பெறப்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. எனவே சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனம் தான் தாமதத்துக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.