உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:
பாஜக பிரதமர் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டவுடன், காங்கிரஸ் நண்பர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். என்னை எளிதாக தோற்கடித்து விடலாம் என்று கூறினர். பா.ஜனதாவுக்கு கூட்டணி கட்சிகள் கிடைக்காது என்றும் கூறினர். ஆனால், இன்று காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பா.ஜனதாவுக்கு புதிய கூட்டணி கட்சிகள் கிடைத்துள்ளன. மோடிக்கு குஜராத்தில் மட்டுமே செல்வாக்கு என்றும் கூறிப்பார்த்தனர். அதுவும் எடுபடவில்லை.
வலிமையான, ஸ்திரமான அரசு அமைக்க 300-க்கு மேற்பட்ட தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை தாருங்கள்.
பாராளுமன்றத்தில் 300-க்கு மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவுடன் பிரதமர் இருந்தால்தான், அவர் சொல்வதை உலகம் கேட்கும். வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, 'வறுமை என்பது ஒரு மனநிலை' என்று கூறியுள்ளார். வாயில் தங்க கரண்டியுடன் பிறந்தவர்களுக்கு வறுமையின் வேதனை எப்படி தெரியும்? தேர்வு நேரத்தில், மாணவன் பிரார்த்தனை செய்வது போல, தேர்தல் நெருங்கும் போது தான்'ஏழை, ஏழை, ஏழை' என்று காங்கிரஸ் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. அதன்மூலம், ஏழைகள் தங்களை காப்பாற்றுவார்கள் என்று கருதுகிறது.
ஏழைகளுக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி, அரசு குடோன்களில் தானியங்களை அழுகிப்போக வைத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், அதை ஏழைகளுக்கு வினியோகிக்க காங்கிரஸ் அரசுக்கு மனம் இல்லை. பிறகு, சாராய உற்பத்தியாளர்களுக்கு அந்த கெட்டுப்போன தானியங்களை அடிமாட்டு விலைக்கு விற்றது.
விவசாயிகள், ராணுவ வீரர்கள் ஆகியோரும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லை. விவசாயிகள், தங்களது எதிர்காலம் பாதுகாப்பற்றது என்று கருதி, தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
எனவே, இவற்றை எல்லாம் போக்கி, உங்களுக்கு சேவை செய்ய இந்த சேவகனுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். பா.ஜனதாவுக்கு ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.