அவிநாசியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆ.ராசாவின் வாகனம், அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டது.
போராட்ட குழுவினர் மற்றும் பொதுமக்களிடம் ராசா பேசியபோது, "நீங்கள் 5 வருடம் இருந்தீர்கள், அவிநாசி அத்திக்கடவு திட்டத்துக்காக என்ன செய்தீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு, உலக வங்கி உதவியுடன் இந்த திட்டத்தை நிறை வேற்றித் தருவேன். இந்தமுறை எம்.பி ஆனதும் இந்த திட்டத்தை நிறைவேற்றித்தருவதாக உறுதி யளித்ததோடு, கடந்தமுறை நான் ஜெயிலில்தான் இருந்தேன் என பதில் சொன்னாராம் ராசா. "மறுபடியும், நீங்கள் ஜெயிலுக் குப் போய்விட்டால் நாங்கள் என்ன செய்வது?" என்று கேட்டபோது, ஒருகணம் திகைப்படைந்து "நானும் உங்களுடன் போராடத் தயார்" என்றபடி சாலையில் உட்கார்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் தயார் என்றார். இதையடுத்து, போராட்டக் குழு அமர்ந்திருந்த சாலைப் பகுதிக்கு சென்று தானும் சாகும் வரை உண்ணா விரதம் என்று சொல்லி 5 நிமிடங்கள் அமர்ந்தார். பின், வாகனத்தை முற்றுகையிட்டவர்கள் திகைத்து நின்று பார்க்க, உடன் வந்த வாகனங்களும் ராசா அருகில் வர, அங்கிருந்து வாகனத்தில் 5 நிமிடத்தில் அந்த இடைத்தை விட்டு சென்றுவிட்டார் ராசா.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.