நாளை சென்னை வரும் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பாஜக செய்திக்குறிப்பில், "நாளை பாஜக தென்சென்னை வேட்பாளர் இல.கணேசனை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நரேந்திர மோடி பிரச்சாரம் செய்கிறார். ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்திற்கு சென்று சந்திக்கிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினிகாந்தை பற்றி கூறும் போது, "திரைத்துறையைத் தாண்டி ரஜினிகாந்த் உன்னதமான மனிதர். அவர் ஒரு தேசியவாதி. நாட்டு நலனில் மிகவும் அக்கறையுள்ள அவர் சரியான நேரத்தில் தனது கருத்தைத் தெரிவிப்பார்." என்று கூறியிருந்தார்.
மோடி, ரஜினிகாந்தை சந்திக்க இருப்பதாக வெளியாகி உள்ள செய்தி, அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.