மோடி மற்றும் பாஜக மீது திமுகவின் திடீர் தாக்குதல் காரணம் என்ன? எதிர்பாராத தகவல்கள்.
திமுக வின் வெற்றியை பாஜக அணி பாதிப்பதால் ஏற்பட்ட விளைவா?
கடந்த சில நாட்களாக திமுகவின் தேர்தல் பிரச்சார தாக்குதல் பாஜகவை குறிப்பாக மோடியை நோக்கி உள்ளது, மோடியை நல்ல உழைப்பாளி திறமைசாலி என்றெல்லாம் சில நாட்களுக்கு முன் குறிப்பிட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதியும், இந்த தேர்தலின் தொடக்கத்தில் இருந்தே பாஜகவையும் மோடியையும் தாக்கி பேசாமல் இருந்த மு.க.ஸ்டாலினும் கடந்த சில நாட்களாக பாஜகவையும், மோடியையும் தாக்க ஆரம்பித்து பிரச்சாரம் செய்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக திமுகவினரிடம் அதிகம் வருபடுவது ஜெயலலிதாவோ, அதிமுகவோ அல்ல, மாறாக பாஜக மற்றும் மோடிதான். இது குறித்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
தமிழகத்தில் தேர்தல் களம் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது, ஆரம்பத்தில் அதிமுக எந்த சிக்கலும் இல்லாமல் பெரும்பாண்மை தொகுதிகளை வெல்லும் என்ற நிலை இருந்தது, பிரச்சாரம் ஆரம்பித்த சில நாட்களில் கள நிலவரம் மாற்றமடைந்து திமுக-அதிமுக ஆளுக்கு பாதி தொகுதிகள் வெல்லும் என்று கணிக்கப்பட்டது, பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக கூட்டணி உருவாகிய பின் தமிழக தேர்தல் கள நிலவரம் மாற்றமடைய தொடங்கிவிட்டது. குறிப்பாக பாஜக அணி வடமாவட்டங்களில் உள்ள 19 தொகுதிகளில் கடுமையான மும்முனைப்போட்டியை உருவாக்கியுள்ளது, ஆரம்பத்தில் பாஜக அணி ஒரு இடம் கூட வெல்லமுடியாது என்று இருந்த நிலை மாறி தற்போது 10 இடங்கள் வரை வெல்லும் வாய்ப்புள்ளதாக அதிமுக மற்றும் திமுக தலைமைகளுக்கு தெரியவந்தது, இதிலும் குறிப்பாக பாஜக கூட்டணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் பல தொகுதிகள் திமுகவுக்கு சாதகமான தொகுதிகள் என்று தெரியவந்த திமுக தலைமை இனியும் சும்மா இருக்கலாகாது என்று பாஜகவுக்கு எதிராக கடும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.
தேமுதிக, பாமக வாக்குகளுடன் மோடிக்காகவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்கும் மனநிலையில் பலரும் உள்ளதால் மோடியை குறிவைத்து தாக்க ஆரம்பித்துள்ளார்கள் திமுகவினர். மோடி திருமணம் ஆனவர் என்ற தகவல் வெளியானதை அடுத்து மூன்று திருமணம் செய்த கருணாநிதி கூட மோடியின் திருமணம் குறித்து விமர்ச்சிப்பதும், 1999ல் பாஜக வுடன் கூட்டணி வைத்திருந்த திமுக திடீரென பாஜக மதவாத கட்சி என்று விமர்சிப்பதற்கும் இது தான் காரணம் என தெரிய வந்துள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க பாஜக கூட்டணி மீது திமுக மட்டுமல்லாமல், அதிமுகவும் தாக்குதலை ஆரம்பிக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.