லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர், "திமுக-வில் உட்கட்சி பூசல் பூதாகரமாய் நிற்கிறது. ஸ்டாலின் பிரச்சாரத்தை தவிர திமுக தரப்பில் மற்ற யாருடைய பிரச்சாரத்தையும் தொலைக்காட்சியில் காட்டுவதில்லை. திமுக-வினருக்கே இந்த நிலை என்றால் நான் எல்லாம் எம்மாத்திரம்? என்று கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய அவர், ’திமுக-வுக்கு ஆதரவான அலையை எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது’ என்கிறார் கலைஞர். அது என் மனதை ரொம்பவே புண்படுத்தியது. ஒருவேளை காலம் கனிந்து, எதிர் அணியில் நின்று நான் களமாடியிருந்தால் கலைஞரால் இந்த வார்த்தைகளை சொல்லி இருக்க முடியுமா? அதனால்தான் நான் இப்போது பேச வேண்டி இருக்கிறது. விஜயகாந்த்துக்கு பின்னால் அலைந்த கலைஞர் ஏன் என்னை கூப்பிட வேண்டும் என்ற கேள்வியையும் டி.ராஜேந்தர் எழுப்பியிருந்தார்.
"திமுக-வின் பிரச்சாரத்தை பலப்படுத்த என்னை அழைத்த கருணாநிதியால் அதை செயல்படுத்த முடியவில்லை. அது ஏன் என்பது புரியாத புதிர். அது எல்லாமும் எனக்கு தெரியும்." என்று கூறிய டி.ராஜேந்தர், திமுக பொருளாளர் ஸ்டாலின் பற்றி பேச எதுவும் இல்லை. அவரை பொருட்டாக நினைக்கவும் இல்லை. என்னிடம் திறமை இருக்கிறது. நான் என்னு டைய தந்தை பெயரை சொல்லிக் கொண்டு நிற்கவில்லை. எத்தனை கலைஞர் என்னை கைவிட்டாலும், கடவுள் துணையோடு என் பயணத்தைத் தொடருவேன் என்று கூறியிருந்தார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.