சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், மோடியை விமர்சித்து திமுக தலைவர் கருணாநிதி பேசியது:
நரேந்திர மோடி சுத்த சுய பிரகாசம்; அவரிடத்திலே எந்தவிதமான அப்பழுக்கும் இல்லை. அவர் எதையும் மறைக்க மாட்டார். எல்லாவற்றையும் திறந்து வைத்ததைப் போலத்தான் சொல்வார் என்று நேற்று வரையிலே சொன்னார்கள். இன்றைக்கு மாலை பத்திரிகையிலே பார்த்தால், அவருக்கு ஒரு துணைவியார் இருக்கிறார் என்ற செய்தியைக் கூட சில நாள் நரேந்திர மோடி நாட்டிற்குச் சொல்லவில்லை. இன்றைக்குத்தான் எனக்கு ஒரு மனைவி இருக்கிறார்.
"நான் தேர்தலுக்காக விண்ணப்பித்த மனுவில் அதைக் குறிப்பிடவில்லை. குறிப்பிடாமல் விட்டு விட்டேன்." என்று மோடி சொல்லியிருக்கிறார். 'நாமினேஷன்' பேப்பரில் தேர்தலுக்காக செய்கின்ற விண்ணப்பத்தில் குடும்பத்தாருடைய பெயரை எல்லாம் சொல்ல வேண்டியது அவசியம். நான் அப்படி செய்யத் தவறினால் மனைவியினுடைய பெயரையோ, மகளுடைய பெயரையோ குறிப்பிடத் தவறினால், அது தேர்தல் கமிஷன் - தேர்தல் ஆணையத்தின்படி குற்றம். அதற்கு வேறு பரிகாரம் எதுவும் இதுவரையிலே காணப்படவில்லை.
ஆனால், நரேந்திர மோடி தனக்கு திருமணமானதை இதுவரையில் சொல்லாமல் மறைத்தார் என்றால், இவர் பிரதமராக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். எப்படி இந்தத் தேர்தலிலே அவர் போட்டியிடப்போகிறார் என்பதெல்லாம் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டிய விவகாரம். எனவே நான் அதை தேர்தல் ஆணையத்திற்கு விட்டுவிடுகிறேன் அவர்கள் முடிவு செய்யட்டும்; எப்படி முடிவு செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
மனைவி இருந்தபோது அதை மறைக்கின்ற நம்முடைய நரேந்திர மோடி, நாளைக்கு இன்னும் எதை மறைக்க மாட்டார்? என்றெல்லாம் கேள்வி எழுந்தால் நாடு என்ன ஆகும்? நாட்டிலே ஆட்சி எப்படி நடைபெறும்? என்பதை தயவு செய்து இதுவரையிலே நரேந்திர மோடி பற்றி அவர் நல்லவர், வல்லவர் என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் சிந்தித்துப் பார்த்ததற்குப் பிறகு வாக்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு கருணாநிதி பேசியிருந்தார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.