காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலம் டோடா மாவட்டத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், மோடி சமீபத்தில் தான் திருமணமானவர் என்பதை வேட்பு மனு தாக்கல் செய்யும் போது முதல் முறையாக வெளியிட்டது குறித்து, மோடியை கடுமையாக தாக்கிப் பேசினார். இது குறித்து அந்தப் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது:
"மோடி இதுவரை எத்தனை தேர்தல்களை சந்தித்திருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், முதல்முறையாக அவரது மனைவியின் பெயரை வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் பெண்களுக்கு மரியாதை அளிப்பது பற்றி பேசிய மோடி, சொந்த மனைவியின் அடையாளத்தை வெளிப்படுத்த இவ்வளவு காலம் எடுத்துள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என கூறும் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு மனைவி பற்றிய தகவலை அளிக்க இவ்வளவு காலம் ஆகிறது. மனைவி பெயரை மறைத்தவரா நாட்டின் பெண்களின் பாதுகாவலர்?" என்று கூறினார்.
மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் நிலை குறித்து பேசிய ராகுல், "கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது அவையில் இருந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள், எந்த மாதிரியான வீடியோ பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது செய்தித்தாள்களின் தெளிவாக வெளியானது. சத்தீஸ்கரில் 20,000 பெண்கள் மாயமாகியுள்ளனர். அவர்கள் எங்கு சென்றார்கள், அவர்கள் கதி என்னவென்று எதுவுமே ராமன் சிங் அரசுக்கு தெரியாத நிலையே" என்று ராகுல் காந்தி கூறினார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.