விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வேட்பாளர் தொல். திருமாவளவனை ஆதரித்து, சிதம்பரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் கருணாநிதி, பாஜகவின் ராமர் கோயில் கட்டுவது குறித்த தேர்தல் அறிக்கையை விமர்சித்து பேசினார். இது குறித்து அவர் பேசியதாவது:
பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ராமர் கோயில் கட்டுவோம் என்கிறார்கள். ராமர் கோவில் கட்டுவோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? இந்தியாவிலே மதக் கலவரத்தை உண்டுபண்ண என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம் என்ற அந்த முறையிலேயே தான் நாங்கள் ராமர் கோயில் கட்டுவோம் என்று இப்போதே அதை தொடங்கி வைக்கிறார்கள்.
தயவு செய்து உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன் ராமர் எங்களுக்கொன்றும் விரோதி அல்ல; தனிப்பட்ட விரோதம் எனக்கும் ராமனுக்கும் கிடையாது. ஆனால் ராமர் கோயில் கட்டினால், அதற்காக பாபர் மசூதியை இடித்தால், அப்படி இடிப்பதற்கு ஜெயலலிதா போன்றவர்கள் ஆதரவு கொடுத்தால், ஏற்கனவே கொடுத்ததை போல, கரசேவைக்கு ஆதரவு கொடுத்தார்களே அந்த அம்மையார், அதைப்போல ஆதரவு கொடுத்தால் நாடு என்ன ஆகும் என்பதை தயவு செய்து எண்ணிப் பாருங்கள், சிந்தித்துப் பாருங்கள்.
எங்களுக்கு ராமரோ, கிருஷ்ணரோ யாரும் தனிப்பட்ட முறையிலே எதிரிகள் அல்ல; விரோதிகள் அல்ல. ஆனால் அந்தக் கடவுள்களின் பெயரால், மதத்தின் பெயரால், கலவரங்களை, அராஜகங்களை ஏற்படுத்துவதை இங்கே வீற்றிருக்கிற தோழமைக் கட்சிகளின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்: அதை நாங்கள் அனுமதிக்க முடியாது; அனுமதிக்கவே முடியாது; நிச்சயமாக அனுமதிக்க முடியாது."
இவ்வாறு கருணாநிதி பேசியிருந்தார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.