உத்தரப்பிரதேச மாநிலம் அவுரங்காபாத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், "கடந்த 2004 மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்ததால் சோனியா காந்தி எந்த தியாகமும் செய்துவிடவில்லை." என்று கூறினார். இது குறித்து அவர் விளக்கி கூறுகையில், "தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்" என்ற புத்தகத்தை எழுதியுள்ள பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பருவா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சோனியா காந்தி தான் நடத்தி வந்ததாக கூறியுள்ளார். அந்த புத்தகத்தில் மத்திய அரசை சோனியா காந்தி தான் நடத்தினார் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:
பாஜக மதவாத கட்சி என காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. மேலும், சமுதாயத்தை பாஜக பிரித்தாள முயற்ச்சிப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், உண்மையில் சோனியா காந்திக்கு வரலாறு தெரியவில்லை. இந்தியப் பிரிவினைக்குக் காரணம் பாஜக அல்ல, காங்கிரஸ் கட்சியே.
நரேந்திர மோடி, பாஜக பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதில் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்று கூறிய ராஜ்நாத் சிங், கட்சியின் மூத்த தலைவர்களுடன் தீர கலந்து ஆலோசித்த பிறகே மோடி பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் என கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.