ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அன்வர் ராஜாவை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:
இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தாக 120 கோடி மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக உள்ளது. காரணம் 10 ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை உருவாக்கி உள்ளது.
ஒரு ஜனநாயக நாட்டின் வளர்ச்சி என்றால் அந்த நாடு பொருளாதாரரீதியாக வளர்ச்சி அடைய வேண்டும். அந்த நாட்டில் ஏழைகளே இல்லாத நிலை இருக்க வேண்டும். உலகத்திலேயே 25 நாடுகள் தான் உண்மையான ஜனநாயக நாடுகளாக இருக்கின்றன. நமது நாடு அந்த பட்டியலில் இல்லை. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் வாழ்கின்ற 53 நாடுகள் குறையுள்ள ஜனநாயகம் உள்ள நாடுகளாக உள்ளன. இந்த குறையுள்ள நாடுகளில் தான் இந்தியா உள்ளது.
இந்திய அரசு தமிழக மீனவர் பிரச்சினையில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. மீனவர்களை காக்க முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தவர் இந்திராகாந்தி. அதற்கு துணையாக இருந்தவர் கருணாநிதி. தற்போது கருணாநிதி கச்சத்தீவை மீட்போம் என்று கூறுகிறார். மக்களை ஏமாற்றும் அவரின் கதை, வசனம் எல்லாம் இனிமேல் எடுபடாது.
இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, எல்லையில் ஊடுருவலை தடுப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதிபட கூறியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஊழல் கட்சிகளை விரட்டியதுபோல இந்த தேர்தலில் சந்தர்ப்பவாத கட்சிகளை விரட்டியடிக்க வேண்டும்.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.