கோச்சடையான் திரைப்படம் முதலில் அறிவித்தபடி மே 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகாது என்றும், இதற்கு பதிலாக மே 23-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், கோச்சடையான் படத்தின் ரிலீஸ் இம்மாதம் 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டதாக ஈராஸ் நிறுவனம் இன்று (புதன்கிழமை) அறிவித்தது. தொழில்நுட்ப காரணங்களால்தான் படத்தை குறித்த தேதியில் வெளியிட முடியாமல் போனதாக, செய்திக் குறிப்பில் ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டிற்கான தேதியே பலமுறை ஒத்திவைக்கபப்ட்டு, பின்னர் மார்ச் 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
வரும் 9ம் தேதியன்று, நடிகர் சந்தானம் நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மற்றும் ஆர்.எஸ் இன்ஃபோடைன்மென்ட் தயாரிப்பில் யாமிருக்க பயமே ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.