தேசிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
தே.ஜ.மு. மற்றும் பாஜகவின் வெற்றியை இந்த நாட்டின் ஒவ் வொரு குடிமகனும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரப் பிரதேசம் வந்த மோடி, திருப்பதி மற்றும் காளஹஸ்தி கோயில்களில் தரிசனம் செய்த அதே நாளில் ஐந்து பிரச்சாரக் கூட்டங்களில் பேசினார். அதை முடித்து தேநீர் அருந்தலாமா என்றார். நான் உணவு அருந்தலாமே என்றதற்கு பணி முடிந்ததும் தான் உணவு எடுத்துக் கொள்வேன் என உறுதியாகக் கூறி விட்டார். அந்த அளவிற்கு தன் கடமையில் மோடி உறுதியாக இருந்தார்.
அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளுக்கு இணையாக இந்தியா இருக்க வேண்டும். சில வளரும் நாடுகள் இருக்கலாம். ஆனால், நமக்கு உண்மையான போட்டி அமெரிக்காவும், சீனாவும்தான். நரேந்திர மோடி நிச்சயமாக அதை செய்து முடிப்பார்.
மோடியின் மனஉறுதியும், உற்சாகமும் அசாதாரணமானவை. மக்கள் காங்கிரஸின் ஊழல், திறமையின்மை, செயல்படாத தன்மை ஆகியவற்றால் வெறுத்துவிட்டனர். மோடியின் தலைமையில் நாட்டிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. அவர் மீண்டும் மீண்டும் பிரதமராக வருவார். அதுதான் நாட்டின் விருப்பமாகும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.