நாட்டின் பிரதமராக இம்மாதம் 26-ம் தேதி பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து, திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
பாஜக நாடாளுமன்ற குழுத் தலைவராக நீங்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். குஜராத்தில் எளிமையாக தொடங்கி இந்தியப் பிரதமர் என்ற உயர் பதவியை நீங்கள் அடைந்துள்ளீர்கள். இதற்குக் காரணம் உங்கள் புத்திசாலித்தனமும், கடின உழைப்புமேயாகும்.
நேற்று வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஏற்புரை வழங்கிய போது, ஏழைகள் நலன் பற்றி சிந்தித்து செயலபடும் அரசாக உங்கள் அரசு இருக்கும் என நீங்கள் கூறியிருந்தீர்கள். கிராமங்கள், இளைஞர்கள், பெண்கள் நலன் பேணப்படும் என உறுதியளித்திருந்தீர்கள். இந்த உயரிய குறிக்கோள்களை நீங்கள் நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என இந்திய தேசமே பெரும் எதிர்பாப்பினை கொண்டுள்ளது.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி பிரதமர் பதவியில் நீங்கள் சிறப்பாக செயல்பட திமுக சார்பில் வாழ்த்துகிறேன்"
இவ்வாறு கருணாநிதி கடிதத்தில் கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.