நாட்டின் பிரதமராக வருகிற 26-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், குஜராத் முதல்வர் பதவியை நரேந்திர மோடி இன்று ராஜினாமா செய்தார்.
இதனை அடுத்து, குஜராத்தின் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆனந்திபென் பட்டேல் தேர்வு செய்யப்பட்டார். நாளை அவரது தலைமையிலான குஜராத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்க, குஜராத் ஆளுநர் கமலா பென்னிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
நரேந்திர மோடியும் ஆனந்திபென் பட்டேலும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். மோடி உள்ளிட்ட தலைவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தன்னுடைய 45-வது வயதில் ஆனந்திபென் அரசியலில் நுழைந்தார். அவர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர். 1987-ல் இரு மாணவிகள் சர்தார் சரோவர் அணையில் மூழ்கியபோது ஆனந்திபென், அணையில் குதித்து இரு வரையும் காப்பாற்றினார். இதற்காக மாநில அரசின் சார்பில் அவருக்கு வீரதீர விருது வழங்கப்பட்டது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.