BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 4 May 2014

மோடி தான் ஒரு அரக்கரா மனிதனா என்பதை அவர் தெரிவிக்க‌ வேண்டும்- வேணி பிரசாத் வர்மா


மஸ்கன்வா நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் வேணி பிரசாத் வர்மா பேசும்போது, இந்த நாட்டில் இந்துவையும் முஸ்லிமையும் பேதப்படுத்தி அவர்களுக்கு இடையே குரோதத்தை வளர்க்கும் ஒருவர் மனிதனே அல்ல அவர் அரக்கன் என்று குறிப்பிட்டுப் பேசினார். அவர் மேலும் பேசுகையில், தான் மனிதனா அல்லது அரக்கனா என்பதை மோடி கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

குஜராத் படுகொலை சம்பவம் பற்றி பேசும்போது நீங்கள் (மோடி) அதை எதிர் விளைவு என கூறுகிறார்கள். தனது வாகனத்தின் கீழ் தானாக ஓடி வந்து ஒரு நாய்க்குட்டி இறந்தால் அது வேதனையானதுதான். என்று கூறி முஸ்லிம்களை கிண்டலடித்துள்ளீர்கள் .

மோடி போன்ற நபர்கள் இந்த நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதிகள்.,

இது போன்ற நபர் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் வாழும் சுமார் 85 சதவீத ஏழை மக்களின் சுயமரியாதை போய்விடும். இந்த சமூகத்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரின் ஆதிக்கமே நிலவும்.

காங்கிரஸ் இல்லாத இந்தியா வரவேண்டும் என்று எக்காளம் போடுகிறார் மோடி. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களே காங்கி ரஸை ஒழிக்கமுடியாமல் தோல்வி கிண்டனர். பாஜக எப்படி இதை செய்ய முடியும். நாடு முழுவதும் உள்ள கட்சி காங்கிரஸ். பாஜகவோ நாட்டின் கால்வாசி பகுதியில் மட்டுமே உள்ள கட்சி.

சிறுவயதில் டீ விற்பதற்காக 18 வயதில் வீட்டை வீட்டு ஓடியவர் மோடி. அவர் பட்டம் பெற்றுவதாக காட்டுவது போலி சான்றாகும். நான் லக்னோ பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றவன்.

இவ்வாறு  வேணி பிரசாத் வர்மா பேசினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media