ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் நேற்று திருப்பதியில் கூடிய தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பைனர்கள் ஒருமனதாக சட்டமன்றத் தலைவராக சந்திரபாபு நாயுடுவை தேர்வு செய்தனர் . இதன்மூலம் அவர் பிரிக்கப்பட்ட ஆந்திராவின் முதல் முதல்வராக ஆக உள்ளார் . வருகிற ஜுன் எட்டாம் தேதி பதவியேற்க உள்ளார் . இந்த விழாவில் தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்ற சந்திரசேகர ராவ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது .
தெலுங்கு தேசம் கட்சி இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 102 சட்டமன்ற தொகுதிகளில் வென்றுள்ளது .
சந்திரபாபு நாயுடு தான் ஒன்றுப்பட்ட ஆந்திராவில் நீண்ட காலமாக முதல்வர் இருக்கையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.