மலேசிய விமானமான MH-370 இந்த வருடம் மார்ச் 8 ஆம் தேதி காணாமல் போனது . இதை தேடும் பணியில் பல நாட்டினர் ஈடுபடட்டனர் . ஆனால் இப்போது தேடும் பணி மந்த நிலையில் செல்கிறது . இதனால் ஆஸ்திரேலிய அரசு தேடும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது . இதனால் பல தேடுவதில் வல்ல தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பி விடுத்துள்ளது . அந்த டெண்டர் அறிக்கையின் படி தேட விரும்பும் நிறுவனத்திடம் தேவையான அனைத்து உபகரணங்களும் இருக்க வேண்டும் .
இந்த டெண்டரை வாங்கும் நிறுவனம் சுமார் 60,000 சதுர கிமீ தேட வேண்டும் . இதை தேட அவர்களுக்கு 300 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும் . ஒவ்வொரு 25 நாட்களும் 5,000 சதுர கிமீ தேட வேண்டும் . ஒவ்வொரு நாளும் அறிக்கை சமர்பிக்க வேண்டும் . அடுத்த 24 மணி நேரம் என்ன செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதையும் சமர்பிக்க வேண்டும் . இடுவே அந்த டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.