விஜய் டிவியில் நேற்று விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது. இதற்கு போட்டியாக கடந்த வாரம் சன் டிவியில் சிங்கம் 2 படம் ஒளிபரப்பபட்டது. விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை குறைந்தபட்சம் 2 கோடி பேர் பார்ப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறியது. இதில் அஜித்துக்கு விருது தராததால் அதற்கு எதிராக அஜித் ரசிகர்கள் இருந்தனர். எனவே அஜித் ரசிகர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள சன் டிவி முடிவு எடுத்தது. அவர்களை தங்கள் பக்கம் இழுக்க நேற்று வீரம் படத்தை போட்டார்கள். #VEERAM_TheCheckMateFromSunTv என்று இந்த ஹாஷ்டேக்கில் அஜித்துக்கு ஆதரவாக டிவிட்டரில் டீவிட்டுகள் வந்த வண்ணம் இருந்தன.விஜய் ரசிகர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன, விஜய்க்கு ஆதரவாக #VIJAYFavHeroForever என்ற ஹேஷ்டேக்கில் டிவீட்டுகள் வந்த வண்ணம் இருந்தன. விஜய் தான் அனைவருக்கும் பிடித்த ஹீரோ என கூறி வந்தார்கள். முதலில் தமிழகத்தில் இருந்த இந்த டிவீட்டுகள் பின்பு உலக அளவில் பரவ தொடங்கியது. பலரின் கவனத்திற்கும் இந்த விவகாரம் சென்றது. டிவிட்டரின் டெரண்டிங்கில் இவை வந்தன.
அதில் பலரை கவரும் வண்ணம் இருந்த சில டிவீட்டுகளை பார்ப்போம்.
1. முன்பெல்லாம் ரஜினி கடைசியா பேசுவார் இப்போ விஜய் பேசுறார் , இது இருந்தே தெரியா வேண்டாமா. #VIJAYFavHeroForever
2. அஜித் ரசிகர்கள் செக்மேட் என்று சொன்னதை கலாய்க்க , இனிமே அவர்கள் கிரிக்கெட் ஆடுவார்கள், கபடி ஆடுவார்கள், ஏன் கதகளி கூட ஆடுவார்கள் ஆனால் செஸ் மட்டும் ஆட மாட்டார்கள். #VIJAYFavHeroForever
3. காசியப்பன் பாத்திரக்கடை அவார்டுகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம். #VEERAM_TheCheckMateFromSunTv
4. தல தலை காட்டாமலே அவர் பெயர் உச்சரிக்கும் போது கரகோஷம் குறைய நேரமாகுது, சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து எல்லார் மனதையும் கொள்ளை கொண்டவன் #தலடா.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.