
கடந்த 24 ஆண்டுகளாக அரசியலில் எதிரிகளாக இருந்த வந்த ஒரே மாநிலத்தின் 2 முதல்வர்கள் இன்று ஒன்றாக சேர்ந்து கை கோர்த்து உள்ளார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை பீஹாரின் முன்னாள் முதல்வர்கள் நிதிஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் தான். இது எப்படி என்றால் தமிழகத்தில் கருணாநிதயும் ஜெயலலிதாவும் ஒரு கூட்டணி அமைத்தால் எப்படி இருக்கும் அது போல அமைந்து இருக்கிறது இந்த கூட்டணி. இவர்கள் இருவரும் ஆரம்ப காலத்தில் ஜனதா கட்சியில் ஒன்றாக பணியாற்றினார்கள். அதன் பிறகு இருவரும் தனியாக கட்ச் அமைத்து பிரிந்து விட்டார்கள். பிஹாரில் லாலுவின் ஆட்சி அதிக காலம் நடந்தது. அதன் பிறகு 2005 இல் பாஜகவுடனான கூட்டணியில் நிதிஷ் குமார் ஆட்சியை பிடித்தார். அதற்கு அடுத்த முறையும் அவரே ஆட்சியை பிடித்தார். நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் வளர்ச்சி பிடிக்காமல் கூட்டணியில் இருந்து விலகினார். அதனால் முடிந்த லோக் சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தது அவரது கட்சி. ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று அங்கு 10 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடக்க உள்ளது. அதில் காங்கிரஸ், லாலு, நிதிஷ்குமார் ஆகியோர் சேர்ந்து பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை அமைத்து உள்ளார்கள். இந்த இடைதேர்தலில் லாலு கட்சிக்கு 4 தொகுதிகளும், நிதிஷ் குமார் 4 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
பார்ப்போம் இந்த கூட்டணி எத்தனை நாட்களுக்கு நீடிக்கிறது என்று.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.