வேறு மதத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் மற்றும் அவர்களின் பாட்டியை இன்னொரு மதத்தைச் சேர்ந்த கும்பல் அடித்து படுகொலை செய்துள்ளனர் . மேலும் 4 பேரின் நிலைமை பரிதாபமாக உள்ளது .
இந்த 3 பேரும் அஹமதி என்னும் மதத்தைச் சேர்ந்தவர்கள் . இவர்கள் தங்களை இஸ்லாமியர்கள் என்று கருதினாலும் மொஹமத் போன்று இன்னொருவர் வருவார் என்ற நம்பிக்கையை கடைப்பிடிப்பர் . இதனால் இவர்கள் 1984 பாகிஸ்தான் சட்டப்படி இவர்கள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று கூறுவர் .
அஹமதி மதத்தைச் சேர்ந்த அகிப் சலிம் என்னும் வாலிபன் இஸ்லாமிய கடவுளை எதிர்க்கும் வகையில் பேஸ்புக்கில் போஸ்ட் ஒன்றை போட்டு இருந்தார் . இதனை எதிர்க்கும் வகையில் ஒரு குழுவினர் காவல் நிலையத்தில் பூகார் செய்ய வந்தனர் . இன்னொரு கும்பல் அஹமதி மதத்தைச் சேர்ந்தவர்களின் வீட்டை எரிக்கவும் , உடைக்கவும் தொடங்கினர் .
இந்த தாக்குதலில் ஆறு முதல் ஏழு வீடுகள் உடைக்கப்பட்டுள்ளது . மூன்று பேர் இறந்துள்ளனர் . எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.