
மதிமுக பொது செயலாளர் மதிமுக சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் நோன்பில் கலந்து கொண்டார். அதில் பங்கேற்ற முஸ்லிம் நண்பர்களுடன் பேசி கொண்டு அவர்களுக்கு ரமலான் வாழ்த்து சொன்னார். பின்பு வைகோ பேசுவதற்காக அழைக்கப்பட்டார். அதில் நபிகள் நாயகத்தின் கருத்து ஒன்றை கூறி அனைவரையும் கவர்ந்தார்.
அது மதுவுக்கு எதிரான கருத்து ஆகும். அதாவது நபிகள் நாயகம் யாரை எல்லாம் சபிக்கப்பட்டவர்களாக கூறுகிறார் என்றால்,
1. மதுபானம் தயாரிப்பவர்
2. தயாரிக்கக் கூறுபவர்
3. மது அருந்துபவர்
4. மது அருந்தத் தருபவர்
5. மதுவை எடுத்துக்கொண்டு போகிறவர்
6. மதுவை எடுத்துச் செல்லக் கூறுபவர்
7. மதுவை விற்பவர்
8. மதுவை வாங்கிச் செல்பவர்
9. மதுவை அன்பளிப்பாக தருபவர்
10.மது விற்ற பணத்தில் உணவு உண்பவர்
ஆகிய பத்து பேரும் சபிக்கப்பட்டவர்களே என்று நபிகள் நாயகம் பட்டியலிடுகிறார். தமிழக குடிகாரர்களுக்கு டாஸ்மாக்கை திறந்து வைத்து மதுவை விற்கும் ஜெயலலிதாவையும் சபிக்கபட்டவராக எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. சொல்லுங்கள் வைகோ சொல்லுங்கள் !!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.