தமிழர்கள் திருநாளாம் பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை ஆகியவற்றை வழங்கிட 486.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் . இதன் முதல் கட்டமாக நெசவாளர் சங்கங்களுக்கு முன்பணமாக 240.55 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கப்பட உள்ளது .
இதுகுறித்து வெளிவந்த தமிழக அரசின் அறிவிப்பில் , " 1982 ஆம் ஆண்டு பருவமழை பொய்த்ததால் , விவசாயிகளின் வாழ்வு மேம்பட , மற்றும் வறட்சியைப் போக்க புரட்சி தலைவர் அவர்களினால் தொடங்கப்பட்டது இலவச வேட்டி சேலை திட்டம் . கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்த வேட்டி சேலைகளை உருவாக்கும் பணிகள் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன .
மேலும் இந்தாண்டு பெண்களின் விருப்பத்திற்கேற்ப ஆடைகளின் வண்ண்ங்களில் மாற்றமும் , வடிவமைப்பில் மாற்றமும் செய்ய கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . சேலைகள் கடந்த ஆண்டைப் போலவே பாலிகாட் சேலைகளை உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.