தாங்க முடியாத சோகமா , யாரிடமும் வெளியே சொல்ல முடியாத அளவு துக்கமா , எதுவாக இருந்தாலும் நம்மிடம் ஒரு மெல்லிய புன்னகை பூத்துக் கொண்டு நம்மை கட்டி அணைத்தால் எவ்வளவு சோகம் இருந்தாலும் நொடியில் காணாமல் போய்விடும் . இதை கமல் , வசூல் ராஜாவில் " கட்டிப்பிடி வைத்தியம் என சொல்லுவார் . இதையே வியாபாராமக்கி வசூல் செய்து வருகிறார் அமெரிக்க பெண் சமந்தா ஹெஸ் .
இவர் இதை தொழில் முறையாக செய்து வருகிறார் . நீங்கள் இதை அதிசயமாக பார்க்கலாம் . ஆனால் இவர் இதனை ஒரு வருடமாக செய்து வருகிறார் . ஒரு மணி நேரத்திற்கு 3,700 ரூபாய் வாங்குகிறார் . இவருக்கு பல கட்டிப்பிடி முறைகள் தெரியும் . வாடிக்கையாளர்கள் தேவை அறிந்து அவர்களுக்கு ஏற்ற முறையை கையாள்வார் .
இவ்வாறு கட்டிப்பிடிக்கும் சமயம் நம்மைச் சுற்ற உள்ள அமைப்பு நமக்கு விருப்பமானதாக இருக்கலாம் . பார்க் , பெட் ரூம் , தியேட்டர் என எதுவாகவும் இருக்கலாம் .
ஆனால் இதில் எந்த விதமான செக்ஸ் நடவடிக்கைகளும் இருக்காது . இருவரும் முழு ஆடையில் இருப்பர் . இதை அவர் தூய்மையாக செய்து வருகிறார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.