ஹிமாச்சல்பிரதேசத்தின் தலைநகரமான ஷிம்லாவில் இனி நீங்கள் ஏ.டி.எம் கார்ட் போன்ற ஒரு கார்டை பயன்படுத்தி குடிக்கும் தண்ணீரைப் பெறலாம் . இந்த வசதியை மாநில முதல்வர் விர்தர்பா சிங் , ஊள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் , சுத்தமான குடிநீரைக் கொடுக்கும் வகையில் போன வாரம் தொடங்கி வைத்தார் .
இந்த இயந்திரம் மூலம் 50 பைசா செலுத்தி ஒரு லிட்டர் குடிநீரைப் பெற்றுக் கொள்ளலாம் . இந்த ஏ.டி.எம் 24 மணி நேரமும் இயங்கும் . இந்த இயந்திரத்தை ஏ.டி.எம் போல எளிதாக பயன்படுத்தலாம் .
இது போன்ற திட்டம் முதன் முதலில் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.