இனிமேல் ஒரு ஹோட்டலுக்கு போகும் போது , அங்கே உள்ளவரிடம் நீங்கள் குடிக்க தண்ணீர் கேட்டால் , அவர் உங்களிடம் சைவம் வேண்டுமா அல்லது அசைவம் வேண்டுமா என்று தான் இனிமேல் கேட்பார் . ஆம் இந்தியாவின் வீட்டு உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று , தன்னுடைய தண்ணீர் வடிகட்டி விளம்பரத்தில் தண்ணீரை சுத்தப்படுத்தி வெஜிடேரியனாக தருவதாக காட்டி வருகின்றனர் .
பொதுவாக வடிகட்டிகள் எல்லாம் தண்ணீரில் உள்ள பாக்டரியாக்களை கொன்று விடும் . ஆனால் இறந்து போன அந்த பாக்டரியாக்கள் அங்கேயே தங்கி விடுவதால் அது நான் வெஜிடேரியன் ஆகி விடுகிறதாம் . ஆனால் இந்த வடிகட்டி அந்த இறந்த பாக்டரியாக்களையும் நீக்கி விடுகிறது . அதனால் நமக்கு வெஜிடேரியன் தண்ணீர் கிடைக்கிறது .
எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க !!!!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.