உடலுறவுக்காக உயிரையும் கொடுக்க பெண்களை விட ஆண்கள் தான் தயாராக உள்ளார்கள், இனப்பெருக்க ரீதியில் எதிர்பாலினத்தை கவர்வதற்க்காக செய்யும் சில வீரமான ஆபத்து நிறைந்த செயல்களில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள்.
இது ஏன் என்று கவனித்தால் ரிஸ்க் எடுத்து உயிரை கொடுத்து ஒரு விரும்பி பெண்ணை அடைந்தால் குறைந்தபட்சம் அவனுடைய சந்ததி தொடடும் வாய்ப்பை உருவாக்கிவிடுகிறான் அதனால் அவன் இறந்தாலும் அது ஒரு பொருட்டல்ல ஏனெனில் பரிணாமத்தை பொறுத்தவரை அவன் சந்ததி உருவாகிவிட்டது.
“பரிணாமத்தில் ஒரு விளையாட்டு உண்டு. அது உன் மரபணுக்களை அடுத்த சந்ததிக்கு லாவகமாகக் கடத்திச் செல்வதே” என்கிறார் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் டேனியல் க்ரூகர் (Daniel Kruger of the University of Michigan)
பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் ஒருவரின் செக்ஸ் உறவின் வெற்றி இரண்டும் ஒரு ஆண்களின் ஆயுட்காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன, மாறாக பெண்களோ இவ்விரண்டினால் பாதிக்கப்படுவதில்லை.
சுமார் 70 நாடுகளில், ஆண்களின் துணையைத் தேர்ந்தெடுக்கும் போட்டியை ஊக்குவிக்கும்கலாச்சார மற்றும் பண்பாட்டு காரணிகளை ஆராய்ந்ததில், இந்த உண்மை வெளிப்பட்டதாக ஆய்வாளர் டேனியக் க்ரூகர் கூறுகிறார்.
ஆண்கள், பெண்கள் வேற்றுமை மிகக்குறைவானதாக இருக்கும் நாடான நார்வேயில் சம பொருளாதார சமநிலை மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளற்ற குறைந்த நாடான நார்வே போன்றவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட ஒரே அளவில் தான் உள்ளன.
ஆனால் பிறநாடுகளில் ஆண்களைவிட பெண்கள் 4.5 வருடம் அதிகம் வாழ்கிறார்கள் , ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆண்கள் பெண்களை விட விரைவில் இறந்தவிடுகிறார்கள் காரணம், அந்த ஆண்கள் அந்தஸ்த்து, பணம் இறுதியில் செக்ஸ்க்காக வன்முறை, மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுகிறார்கள் இதன் விளைவு, ஆண்-பெண் இறப்பின் விகித வித்தியாசம், கொலம்பியாவில் 7.8 வருடங்கள், அமெரிக்காவில் 5.2 வருடங்களால். அதாவது, பெண்களைக்காட்டிலும் ஆண்கள் சீக்கிரம் இறந்துவிடுகிறார்கள்!
கற்பனையான பொருளாதார ஏற்றத்தாழ்வு கூட ஆண்களின் ஆயுட்காலத்தை பாதிக்கிறது, எடுத்துக்காட்டாக ஹை ஃபை தொலைக்காட்சிகளான எம்.டிவி (MTV) போன்றவை பணக்காரத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன, விளைவு, அம்மாதிரியான தொலைக்காட்சி அலவரிசைகளைப் பார்க்கும் ஆண்கள், “நானும்கூட இது மாதிரியான விலை உயர்ந்த பொருட்கள் சம்பாதிக்கனும்” அப்படிங்கற அவங்களோட எதிர்பார்ப்புகளும் பல மடங்கு கூடிவிடுகிறது என்கிறார் க்ரூகர். இதனால் இரவு பகல் பாராமல் வேலை செய்து உடலை கெடுத்து வாழ்க்கையையும் கெடுத்துக்கொள்கிறார்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.