இப்போது கிட்டதட்ட அனைவரும் படத்தைப் பார்த்து விட்டு அதைப் பற்றி எழுத ஆரம்பித்து விட்டார்கள் . சிலர் அப்படி எழுதுவதற்காகவே படத்தை முதல் நாள் பார்க்க சென்று விடுகிறார்கள் . மேலும் சிலர் படத்தில் கிளைமாக்ஸ் வரும்போதே அந்த படத்தைப் பற்றி டைப் அடிக்க ஆரம்பித்து வருகின்றனர் . நம்முடைய கருத்தைச் சொல்வதற்கு நமக்கு சுதந்திரம் இருக்கிறது .
அது போல திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சினா ராயா என்னும் பெண் குறும்பட இயக்குநர் மலயாள நடிகர் அசிஃப் அலி யின் , " ஹை ஐ அம் டோனி " என்னும் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்தார் . மேலும் அந்த பணம் கொடுத்த காசிற்கு மதிப்பாக இல்லை என்றும் கிளைமாக்ஸ் காட்சி சரி இல்லை என்றும் தெரிவித்தார் .
இதனால் கோவமடைந்த அசிஃப் அலி ரசிகர்கள் தொடர்ந்து சினா ராயாவுக்கு மிரட்டல் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் . சில ரசிகர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் அந்த பெண் இயக்குநரை அடித்துள்ளனர் .
இது குறித்து காவல்துறையிடம் அவர் பூகார் கொடுத்தார் . அவர் கொடுத்த பூகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.