டிரெயின் உணவுகளின் தரம் மோசமாக இருப்பதால் , ஐ.ஆர்.சி.டி.சி உட்பட 9 உணவு தயாரிப்பாளர்களுக்கு 11.50 லட்சம் அபதாமாக விதித்தது இந்தியன் ரயில்வேஸ் .
ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " நாங்கள் கடந்த ஒரு மாதமாக ஒரு சிறப்பு குழுவை தொடங்கி , பல்வேறு ரயில்களில் பறிமாறப்படும் உணவை பரிசோதித்து வந்தோம் . உணவு சரியில்லாத உணவு தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம் " என்றார் .
மேலும் கொல்கத்தா ராஜ்தானி ரயிலில் ஜூலை 26 ஆம் தேதி பறிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது . அதற்கு காரணமான ஐ.ஆர்.சி.டி.சி க்கு ஒரு லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது . இது போன்று 50,000 முதல் 1 லட்சம் வரை அபராதமாக விதிக்கப்படும் . இது போன்று 5 முறை மாட்டிக் கொண்டால் அவர்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.