நாம் இப்போது கிட்டதட்ட அரைகுறையான டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம் . இந்த டிஜிட்டல் உலகில் மக்களுக்கு போதை தருவது இண்டர்நெட் தான் . அந்த போதையில் இருந்து விடுபட இந்தியாவின் முதல் இண்டர்நெட் அடிமையாகுதலை தடுக்கும் முதல் மையம் டில்லியில் திறக்கப்பட்டுள்ளது .
இங்கே முக்கியமாக சிறுவர் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வருகின்றனர் . இங்கே சிகிச்சைக்கு வருபவர்களை சில விளையாட்டுகளை விளையாட வைத்தும் , மற்றவர்களிடம் உரையாட வைத்தும் அவர்களுக்கு வெளி உலகம் எவ்வளவு அழகானது என்பதை உணர்த்துகின்றனர் .
இன்னும் சில நாட்களில் இது போன்ற மையங்கள் நாடு முழுவதும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.