தமிழில் ஒரு காலத்தில் சிறந்த நடிகையாக விளங்கியவர் நடிகை ஊர்வசி. நகைச்சுவயாக நடிப்பதில் இவர் சிறந்தவர். வாமனன் படத்தில் செய்த காமெடி மூலம் இப்போது உள்ள இளைஞர்களையும் கவர்ந்தார். நடிகை ஊர்வசியும் மனோஜ் கே.ஜெயனும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற 14 வயது மகள் உள்ளார். கருத்துவேறுபாடு காரணமாக ஊர்வசியும் மனோஜூம் கடந்த வருடம் விவாகரத்துப் பெற்றனர். அவர்களது மகள் தேஜலட்சுமி இப்போது அவரது தந்தையுடன் இருக்கிறார்.
இதையடுத்து மனோஜ் கே.ஜெயன், ஆஷா என்ற பெண்ணை மணந்தார். ஊர்வசி, சிவபிரசாத் என்பவரை தனது 43வது வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களது திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. இதனையடுத்து ஏப்ரல் மாதம் ஒரு பேட்டியில் தான் 4 மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவலை தெரிவித்தார். இந்நிலையில் ஊர்வசிக்கு 8 ஆம் தேதி அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.